JACTTO-GEO அவசரச்செய்தி:நாளை வட்ட அளவில் நடைபெற இருந்த மறியல் போராட்டம் மாவட்ட அளவில் மறியல் போராட்டமாக நடத்த முடிவு.
ஜாக்டோ ஜியோ அமைப்பை அழைத்துப் பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசுக்கு நீதிமன்றம் ஆலோசனை.
மாணவர்கள் நலன் கருதி 25ஆம் தேதிக்குள் பள்ளிக்கு திரும்ப ஆசிரியர்களுக்கு நீதிமன்றம் வேண்டுகோள்.
*****************************
ஜாக்டோ ஜியோ முடிவு
*****************************
1. நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்ய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நாளை 24.01 2019 சென்னையில் கூடுகிறது.
2.நாளை திட்டமிட்டபடி போராட்ட நடவடிக்கைகள் தொடரும் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.
.
*அவசர சுற்றறிக்கை*
ஜாக்டோ-ஜியோ நடத்தும் வட்ட அளவில் நாளை நடைபெறும் மறியலை இரத்து செய்து *மாவட்ட அளவில் தலைநகரங்களில் நடத்த* *முடிவு செய்துள்ளது* . ஆகவே ஆசிரியப் பெருமக்களும் அரசு ஊழியப் பெருமக்களும் நாளை வட்டாரத்திற்கு செல்லாமல் *மாவட்ட தலைநகருக்கு* வருமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
2. நாளை மதியம் 2 மணிக்கு மாநில உயர்மட்டக் குழு கூட்டம் கூடி *அடுத்த கட்ட நடவடிக்கையை* மேற்கொள்ளும்.
3. உயர் நீதிமன்றம் தடை எதும் விதிக்கவில்லை. *வேண்டுகோள் மட்டுமே* விடுத்துள்ளது.
4 நாளைய மறியலை மிக எழிச்சியுடன் நடத்த *ஜாக்டோ* - *ஜியோ* அமைப்பு கேட்டுக் கொள்கின்றது.
இவண்
*முனைவர் அ.மாயவன்*
*ஜாக் டோஜியோ* *ஒருங்கிணைப்பாளர்*
*சு.பக்தவச்சலம்*
*மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்.*
*ஜாக்டோ ஜியோ*
*மாநில மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு*
*பாவலர் க.மீனாட்சி சுந்தரம் அவர்களின் தொலைபேசி தகவல் இது*
*நாளை( 24.01.2018) ஜாக்டோ-ஜியோவின் மாவட்டத் தலைநகரில் மறியல் நடத்தப்படும்*
(வட்டார தலைநகர் என்பதை மாவட்ட்தலைநகராக மாற்றப்பட்டுள்ளது)
*எனவே அனைத்து ஒன்றிய,மாவட்டத் தொடர்பாளர்களும், இயக்கப் பொறுப்பாளர்களும் நாளைய மாவட்டத்தலைநகரில் மறியலை மிகப்பெரிய தஅளவில் வெற்றியடையச் செய்ய திட்டமிட்டு செயலாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.*
*அனைத்து சங்கங்களில் உள்ள* *உறுப்பினர்களும்*
*100% மறியலில்* *பங்கேற்கவேண்டும்*
*ஆசிரியர்கள் மற்றவர்களை தொடர்பு கொண்டு போராட்டத்தில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் பங்கேற்கவும்.
*மு.மோகன்*
*மாநில கொள்கை* *விளக்கச்செயலர்*
*தமிழ்நாடு* *தொடக்கப்பள்ளி* *ஆசிரியர் மன்றம்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..