தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத் தேர்வு நடத்தப்படாது என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
பொதுத் தேர்வு குறித்து மாணவர்களோ, பெற்றோரோ அச்சப்படத் தேவையில்லை என்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வி திட்டப்படி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவைக் கைவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான முடிவை தமிழக அமைச்சரவையே முடிவு செய்ய வேண்டும் என்றும், எனவே நடப்பாண்டில் பொதுத் தேர்வு நடத்தப்படாது என்பதை மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.



Join Whats App Group Link -Click Here