அன்னவாசல்,மார்ச்.27:அரசுப்பள்ளியில் ஊர்ப் பொதுமக்கள் ஐம்பெரும்விழா கொண்டாடி அசத்தினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மலைக்குடிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா,பள்ளி விளையாட்டு விழா,முத்தமிழ் மன்ற விழா,சாதனையாளர்களுக்கு பாராட்டுவிழா ,தனித் திறன் வகுப்புகள் தொடக்க விழா என ஐம்பெரும்விழா நடைபெற்றது..
விழாவில் கலந்து கொண்டு நாட்டுப்புற பாடகர்கள் செந்தில்கணேஷ் - ராஜலெட்சுமி செந்தில் கணேஷ் ஜோடியினர் பேசியதாவது: விழா நடத்துவது என்பது என்பது மிகப்பெரிய கஷ்டம்.அதிலே ஊர்ப்பொதுமக்கள் நம்ம ஊர் பள்ளி,நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளி என நினைத்து ஒற்றுமையாக இருந்து ஒரு கோவில் திருவிழா,ஒரு வீட்டு விழா போல் ஐம்பெரும்விழாவை கொண்டாடியதை பார்க்கும் பொழுது மகிழ்வாக உள்ளது..இப்பள்ளியின் சார்பிலும்,ஊர்ப்பொதுமக்கள் சார்பிலும் எங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருதினை வழங்கி கௌரப்படுத்தியுள்ளீர்கள்.நாங்கள் இப்பொழுது எங்களது கலைப் பயணத்தையே தொடங்கி இருக்கிறோம்.அதனால் நாங்கள் இதனை சாதனையாளர் விருதாக கருதிக் கொள்கிறோம். இனி மேல் நீங்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதாக இருந்தால் ஒரு கலைக்கு தன் வாழ்நாள் முழுவதும் தன்னை முழுமையாக அர்ப்பணித்த மூத்த கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்குங்கள்.இங்குள்ள குழந்தைகளுக்கு ஒன்றை சொல்ல கடமைப்பட்டுள்ளோம் .அதாவது ஆடல் ,பாடல்,விளையாட்டு எவ்வளவு முக்கியமோ அது போல படிப்பும் உங்களுக்கு முக்கியம்..தமிழை நன்றாக படிங்க,கட்டுரை எழுதுங்க அதே போல் ஆங்கில அறிவையும் கற்றுக் கொள்ளுங்கள்..உங்களிடம் படிப்பு மட்டும் இருந்தால் போதாது .பெற்றோர்கள் சொல்வதை கேட்டு,பெரியோர்களை மதித்து ஆசிரியர் அறிவுரையின் படி சமூகத்தில் உயர்ந்தவர்களாக வர வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
முன்னதாக தமிழக அரசின் கலைநன்மணி விருதுபெற்ற ஸ்ரீ அம்மன் சிலம்பக் கூட நிறுவன மாஸ்டர் முத்துகிருஷ்ணன் தலைமையில் சிலம்பாட்டத்தில் லிம்கா சாதனை,உலக சாதனை புரிந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.அதன்பின்னர் திருச்சி மயூரா பரதநாட்டிய பள்ளியின் பரத மாஸ்டர் சாருமதி மலைக்குடிபட்டி பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய வகுப்பினை தொடங்கி வைத்தார்.தனித்திறன் சிறப்பு வகுப்புகளை கலைக் காவிரி அமைப்பை சேர்ந்த சதீஸ்குமார் தொடங்கி வைத்தார்.பின்னர் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும ஆசிரியை அ.சபீனா வரவேற்றுப் பேசினார்.ஆசிரியை பா.ஜெனிட்டா ஆண்டறிக்கை வாசித்தார்.
அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராசு,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் செல்லத்துரை,வட்டார வளமைய பயிற்றுநர் அமிர்தராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஆசிரியைகள் செ.எல்சி,இரா.அமுதா,ஜோ.கரோலின் ச.பானு ,இராஜலெட்சுமி,தீபா,செல்வி ஆகியோர் மாணவ,மாணவிகளை நடனத்திற்கு தயார் செய்திருந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் ஆம்ஸ்ட்ராங் நெப்போலியன் தலைமையில் பெற்றோர் ஆசிரியர்கழகத்தினர்,பள்ளி மேலாண்மைக் குழுவினர்,ஊர்ப்பொதுமக்கள்,இளைஞர்கள்,சுய உதவிக் குழுவினர் செய்திருந்தனர்.
குறிப்பாக ஊர்ப்பொதுமக்களோடு ஒருவராக விழாவை கண்டுகளித்து இடையிடையே பாட்டுப்பாடி,மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பொதுமக் களின் பாராட்டினை நாட்டுப்புற பாடகர்கள் செந்தில கணேஷ்- ராஜலெட்சுமி செந்தில் கணேஷ் ஜோடியினர் பெற்றனர்.அவர்களுக்கு ஊர்ப்பொதுமக்களும் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..