அன்னவாசல்,மார்ச்.21:வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் குடுமியான்மலையில்  நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

  முகாமில் பெண்மையைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி சமுதாய கூடத்தில் தொடங்கி ஊரின் அனைத்து வீதிகளின் வழியாக நடைபெற்றது.

 பேரணியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் செ.சுகன்யா கண்ணா  துவக்கி வைத்தார்.

பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் ஒரு பெண்ணிடம் நீ எல்லை மீறும் போது, உன் தாயின் வளர்ப்பு அவமதிக்கப்படுகிறது போன்ற முழக்கங்களை எழுப்பியவாறு மாணவர்கள் ஊர்ப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 பின்னர் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ஊரின் சாலை ஓரங்கள், குடியிருப்பு பகுதிகள், கடைவீதிகள் போன்ற பகுதிகளில் கிடக்கும் நெகிழிப் பைகளை சேகரித்து அகற்றினர். மேலும் கால்நடை மருத்துவர் பெ.அஞ்சலி தேவி தலைமையிலான மூன்று பேர் கொண்ட மருத்துவ குழுவின் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாடுகள், ஆடுகள், கோழிகள் மேலும் செல்லப் பிராணிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு உண்ணிகளுக்கான ஊசி, கருத்தரிப்பு ஊசி, தடுப்பு  ஊசிகள் அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து முனைவர் கோ.பூமிராசும்,வேளாண் காடுகள் குறித்து முனைவர் இரா.ஜுட்சுதாகரும் சிறப்புரை  ஆற்றினார்கள். இறுதியாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here