பொறியியல் கலந்தாய்வுக்காக, ஆறு நாள்களில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் நடத்துகிறது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமையுடன் 6 நாள்கள் முடிவடைந்த நிலையில், 60,362 பேர் பதிவு செய்துள்ளனர். 47,289 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். 52,232 பேர் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர்.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here