கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என ஜாக்டோ ஜியோ மாநிலக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மு.சுப்பிரமணியன், ஆறுமுகம், ச.மோசஸ் ஆகியோர் தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
கடந்த ஜனவரி 22 முதல் ஜனவரி 29 வரை ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீதான 17 பி ஒழுங்குமுறை நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் அவர்களுக்கு பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசு ஆறு மாத காலத்துக்கு ஒருமுறை வழங்கும் அகவிலைப்படியை தமிழகஅரசு உடனடியாக வழங்குவது கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
எனவே 1.1.2019 முதல் வழங்க வேண்டிய 3 சதவீதம் அகவிலைப்படியை உடனடியாக தமிழக அரசு ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு தாமதிக்காமல் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக இடைநிலை ஆசிரியராகப் பணி புரிந்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக 1,500 இடைநிலை ஆசிரியர்களை நீதிமன்ற உத்தரவுப்படி பணிநீக்கம் செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
மேலும் தகுதித் தேர்விலிருந்து அந்த 1,500 ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனJoin Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here