ஆசிரியர் பணிக்கான டெட் தகுதித் தேர்வுக்கு 1,552 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் பணிகளில் சேருவதற்கு, மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, டெட் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையில் பணியாற்ற, தகுதித் தேர்வின், முதல் தாளும், எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற, தகுதித் தேர்வின் இரண்டாம் தாளும் எழுதி,தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி, இந்த ஆண்டுக்கான  டெட் தேர்வுகள்  ஜூன் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன.
இந்தத் தேர்வில் ஆறு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். 2010-ஆம் ஆண்டுக்குப் பின், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களில்  இதுவரை தகுதித் தேர்வு முடிக்காதவர்களுக்கு, இந்த டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளன.
 இந்த தேர்வுக்கு 32 மாவட்டங்களில் 1,552 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் தாளுக்கு, 471 மையங்களும், இரண்டாம் தாளுக்கு, 1,081 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும், முதல் தாளுக்கு, 28; இரண்டாம் தாளுக்கு, 60 என, 88 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here