எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வின் (நீட்) விடைக் குறிப்புகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx))  அந்தக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடங்களில் கேட்கப்பட்ட 180 கேள்விகளுக்கான விடைகள் அதில் இடம்பெற்றுள்ளன. அந்த விடைகளில் ஏதேனும் தவறாக உள்ளதாகக் கருதும் பட்சத்தில், தேர்வர்கள் அதுகுறித்து வெள்ளிக்கிழமை (மே 31) வரை முறையிடலாம்.
அதற்காக ஒவ்வொரு கேள்விக்கும் தலா ரூ.1,000 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். விடைகள் தவறு என நிரூபணமாகும் பட்சத்தில், அந்தக் கட்டணம் முறையீடு செய்த சம்பந்தப்பட்ட தேர்வருக்கு திருப்பியளிக்கப்படும்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 5-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் மட்டும் 1.3 லட்சம் பேர் அத்தேர்வை எழுதியதாகத் தகவல்கள் வெளியாகின.
தேசிய தேர்வு முகமையின் தகவலின்படி நாடு முழுவதும் அத்தேர்வை 15 லட்சம் பேர் எழுதியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் முடிவுகள் வரும் ஜூன் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளன.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here