👆👆👆👆👆👆👆👆
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண் - 94
அதிகாரம் : இனியவை கூறல்
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
பொருள்:
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ , அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்..
Charity begins at home
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
1. Mob - கூட்டம்
2. Moisture - நீர்க்கசிவு
3. Mole - மூஞ்சூறு
4. Mole - மூலக்கூறு
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. பூனை எத்தனை மாதங்களில் குட்டி ஈனும் ?
3 மாதங்களில்
2. மடிப்பு மலைத்தொடர் என அழைக்கப்படுவது எது ?
இமயமலைத் தொடர்
✡✡✡✡✡✡✡✡
Daily English
1. An angel came in my dream.
2. My ankle is swollen.
3. Bamboo is used in making furniture.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
காப்பி
🍜 காப்பி உலகில் மிகவும் அதிகமாக பருகும் நீர்ம உணவுகளில் ஒன்றாகும். காப்பிச் செடிப் பேரினம் ருபியாசியே (Rubiaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது.
🍜 ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் தான் இது முதலில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் எத்தியோப்பியாவில் இருந்து எகிப்து மற்றும் ஏமன் நாட்டிற்கு பரவியது.
🍜 காப்பி எனும் சொல் ஆங்கிலச் சொல்லாகிய coffee என்பதன் தமிழ் வடிவம் ஆகும். காப்பி எனும் செடியில் விளையும் சிவப்பு நிற கொட்டையை வறுத்து , அரைத்துப் பொடி செய்து பாலுடன் சேர்த்தோ சேர்க்காமலோ சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி ஆகும்.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
புள்ளிமான்கள்
ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது.
எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றன புள்ளிமான்கள்.
சரி, உங்களில் யார் திறமையானவர்கள்? என்று கேட்டது சூரியன். நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்! என்றது புள்ளிமான்கள். சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது.
சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. சூரியன் ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டது. ஒரு புள்ளி மான் சொன்னது, நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்றது. இன்னொரு புள்ளிமானும், நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்று சொன்னது.
இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது, அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப்பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து ரசிக்கும்.
நீதி :
நண்பர்களே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮தமிழகத்தில் கொரோனோ வைரஸ் பாதிப்பு யாருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
🔮சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது.
🔮தான்சானியா நாட்டில் உள்ள சர்ச்சில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
🔮நியூசிலாந்துக்கு எதிரான 5-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
🔮நிர்பயா பாலியல் குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக் கோரிய வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
🔮மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வருகின்ற 4-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
HEADLINES
🔮Nirbhaya case: Delhi HC reserves judgement on Centre’s plea against stay of execution.
🔮Australian Open | Djokovic beats Thiem to win record-extending eighth title.
🔮Coronavirus: India temporarily suspends e-visa facility for Chinese and foreigners residing in China.
🔮India registers 5-0 sweep against New Zealand in T20I series.
🔮Budget 2020 | No intention to tax global income of NRIs in India, says Nirmala Sitharaman.
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..