Click Here to Apply - Anbasiriyar Award


ராம்ராஜ் காட்டன் & தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உடன் இணைந்து ’இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் அன்பாசிரியர் விருது: தபால் / இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களுக்கு தனித்துவமான கல்வியை அளிப்பதோடு நின்று விடாமல், திறன் வளர்ப்பு, சமூக அக்கறை, நற்பண்புகளை ஊட்டி வளர்த்து, பள்ளியையும் மேம்படுத்தும் ஆசிரியர்கள் பலர். ​

அந்த நல்லடையாள ஆசிரியர்களை 'அன்பாசிரியர்' என்ற விருதோடு கவுரவிக்க பெருமையுடன் காத்திருக்கிறது 'இந்து தமிழ் திசை '.​
ராம்ராஜ் காட்டன் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறையும் இந்த முன்னெடுப்புக்குத் துணை நிற்கிறது. ​
'இந்து' தமிழ் திசை இணையத்தில் எழுதப்பட்ட 'அன்பாசிரியர்' கட்டுரைகளின் தொகுப்பைப் படிக்க இதை க்ளிக் செய்யவும்
அன்பாசிரியர் தொகுப்பு
அன்பாசிரியர்கள் குறித்த வீடியோவைக் காண இதை க்ளிக் செய்யவும்:அன்பாசிரியர் வீடியோ
ஆசிரியர்கள் மேலே குறிப்பிட்ட கட்டுரைகள், வீடியோக்களைப் பார்த்துவிட்டு அன்பாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?​
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள்.​


தொடர்ச்சியாகக் கற்பித்து வரும் தலைமை ஆசிரியர்களும் விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.​​
என்ன செய்ய வேண்டும்?​
'இந்து தமிழ் திசை' இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.​
அதனுடன் சுய விவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள்/ வீடியோக்கள், ஊடக அங்கீகாரங்கள், ஆசிரியரின் நன்முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் அனுப்ப வேண்டும்.


இணையம் வழியே அனுப்ப முடியாதவர்கள், விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து , ''அன்பாசிரியர் விருதுக் குழு, இந்து தமிழ் திசை, 124, வாலாஜா சாலை, சென்னை- 2'' என்ற முகவரிக்கு, மேற்சொன்ன ஆதாரங்களின் நகலுடன் - பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வந்து சேரும்படி - அஞ்சல் வழியாகவும் அனுப்பலாம் Click Here.... அதிகமான தகவல்கள் இருப்பின் தனிக் காகிதத்தில் எழுதி அனுப்பலாம்.

அன்பாசிரியர் தேர்வு முறை​
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 'இந்து தமிழ் திசை' அலுவலத்தில் முதல் கட்ட நேர்காணல் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும். ஆசிரியர்கள், அவர்களின் மண்டலத்துக்கு ஏற்றபடி மேற்கண்ட நான்கு நகரங்களில் ஒன்றுக்கு நேரில் வர வேண்டியிருக்கும்.
நேர்காணலுக்கு தன்னிடமுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், பிற விவரங்களை ஆசிரியர்கள் எடுத்து வரவேண்டும்.
மண்டல அளவில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிகட்ட நேர்காணல் பிப்ரவரி 16-ம் தேதி நடத்தப்படும். ​
மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 37 பேருடன் புதுச்சேரி சேர்த்து, 38 பேருக்கு பிப்ரவரி 23-ம் தேதி 'அன்பாசிரியர்' விருது வழங்கப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: பிப்ரவரி 7, 2020.


கூடுதல் தகவல்களுக்கு: முருகேசன் - 9444360421