ஈரோடு: ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்ததாக புள்ளி விபரங்களுடன் புகார் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2012 முதல் 2014 வரை ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், இது ஆதாரமற்ற புகார் என்றும், புள்ளி விபரங்களுடன் புகார் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிர்வாகத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றிருப்பதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் திட்டம் முதன் முதலில் தமிழகத்தில் நடைமுறைபடுத்தப்பட்டதாக கூறினார்.
தமிழகத்தில் சிறுபான்மையினர் நலனுக்காக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மகளிர் முன்னேற்றத்திற்கு 78 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகவும் செங்கோட்டையன் கூறினார்


Join Telegram& Whats App Group Link -Click Here