திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் உ. அமுதா தலைமையில் கூத்துப்பட்டறையின் நிறுவனர் பத்மஸ்ரீ ந.முத்துசாமி அவர்களின் நினைவாக அவர் மகன் ரவி அவர்கள் அளித்த நிதியுதவி மூலம் தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க செயற்பாட்டாளர் திருமதி உமா அவர்களது முயற்சியால் பெறப்பட்ட க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியினை மாணவர்களின் தாய்மொழியாம் தமிழ் மொழியின் அறிவு  வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் நன்றியோடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர் அர்ச்சுணன் அனைவரையும் வரவேற்றார். தமிழ் மொழியின் அவசியம் குறித்தும் தமிழ் மொழி எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் ஆசிரியர் மணி கணேசனும்  தாய்மொழியின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு பற்றி ஆசிரியர் நா. மோகனும் கருத்துரை வழங்கினர். எம் மொழி தமிழ் என்னும் தலைப்பில் மாணவ மாணவிகள் கவிதைகள் வாசித்தனர். முடிவில் ஆசிரியர் சு. அருள் நன்றி கூறினார். நிகழ்ச்சியின் இறுதியில் ஆறாம் வகுப்பு மாணவ மாணவிகளின் பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகம் நிகழ்த்தப்பட்டது.

Join Telegram& Whats App Group Link -Click Here