ரூ. 5 லட்சத்துக்கு குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்குமாறு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஒரு பக்கம் மருத்துவ ரீதியிலான பிரச்னையை சந்தித்து வரும் அதேவேளையில், கடுமையான பொருளாதாரப் பிரச்னையையும் இந்தியா எதிர்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக கடந்த மாதம் 26-ஆம் தேதி ரூ. 1.70 லட்சம் கோடி சலுகைத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்நிலையில்,14 லட்சம் பேர் பயனடையும் வகையில், நிலுவையில் இருக்கும் ரூ. 5 லட்சம் வரையிலான வருமான பிடித்தத்தை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய்த் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் சிறு குறு தொழில் நடத்துவோர் உட்பட தொழில்புரியும் சுமார் 1 லட்சம் பேர் பயனடையும் வகையில் அனைத்து ஜிஎஸ்டி மற்றும் தொடர்புடைய வரி பிடித்தமும் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Join Telegram& Whats App Group Link -Click Here