சென்னை:  தமிழகத்தில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது செயல்பாட்டில் உள்ள ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அடுத்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், தமிழகம் முழுதும், ஆகஸ்ட், 15ம் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடைப்பிடித்து, சுதந்திர தின விழா கொண்டாடப்படும் எனவும் முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில், அனைத்து வகைப் பள்ளிகளிலும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் பின்வருமாறு..

அரசுக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின் அடிப்படையில், நமது இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர தின விழாவினை 15.07.2020 அன்று, பள்ளிக்கல்வி கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் / மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் / அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி எளிய முறையில் சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள் :

1. அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் / மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சுதந்திர தின விழாவினை , சமூக இடைவெளியியைப் பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடுதல் வேண்டும்.

 2. அனைத்து வகைப் பள்ளிகளிலும் தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுதல் வேண்டும்.

3. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் முன் களப் பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள் , சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் சேவையினைப் பாராட்டும் பொருட்டு அவர்களை மேற்படி விழாவிற்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும்.

4. கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது பூரண குணமடைந்த நபர்களையும் மேற்படி விழாவிற்கு அழைக்கலாம்.

குறிப்பு :

* சுதந்திர தின விழாவின் போது , கொரோனா தொற்று பாதுகாப்பு / தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளியை பின்பற்றுதல் , முகக்கவசம் அணிதல் மற்றும் கூட்டங்களைத் தவிர்த்தல் வேண்டும்.

* கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வசதி ஏற்படுத்துதல் மற்றும் கோவிட் -19 சார்பான சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் கண்டிப்பாக பின்பற்றுதல் வேன்டும்.

மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி சுதந்திர தின விழாவினை எளிமையாக கொண்டாடி அதன் விவரத்தினை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்கும் படி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Join Telegram& Whats App Group Link -Click Here