தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சில பள்ளிகள், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது.

அந்தவகையில், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி, முழுமையான இணையவழி ,பகுதியளவு இணையவழி ஆஃப்லைன் மோடு, என்ற 3 முறைகளில் வகுப்புகள் நடத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்காக, தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்தநிலையில், எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

அதுமட்டுமின்றி, 1 முதல் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 1.30 மணிநேரம் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் எனவும், 9 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 3 மணி நேரம் வரை ஆன்லைன் வகுப்புக்கான நடத்தலாம் என தெரிவித்தது.

மேலும், ஆசிரியர்கள் நாள் ஒன்றுக்கு 6 வகுப்புகள் மட்டுமே எடுக்குமாறும், ஒரு வகுப்பு 30 முதல் 45 வகுப்புகள் வரையே நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Join Telegram& Whats App Group Link -Click Here