நடப்பு கல்வி ஆண்டில் 40 % பாடத்திட்டம் குறைப்பு – அமைச்சர் செங்கோட்டையன்


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடபட்ட பள்ளிகள் 5 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்க படவில்லை .மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் தற்போது  ஆன்லைன் வழியாக கல்வி கற்றல் பணியானது நடைபெறுகிறது . இனி பள்ளிதிறந்தால் 100 சதவீதம் பாடங்களை நடத்தி முடிக்க இயலாது எனவே பள்ளி படதிட்டம் குறைக்கபடும் என தமிழகபள்ளி கல்வி துறை அறிவித்து அதற்க்காக 18 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கபட்டது.

இந்த நிலையில் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நிபுணர்குழுவினர் அளித்த அறிக்கையின் படி நடப்பாண்டு 40 சதவிகித பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார் 



Join Telegram& Whats App Group Link -Click Here