மருத்துவ குழுவுடன் ஆலோசித்த பிறகுபள்ளி திறப்பு -முதலமைச்சர் பழனிசாமி 


கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் விருப்பத்தின் பேரில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது.அதனை தொடர்ந்து சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளி செல்கின்றனர் . 

 அண்மையில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் , அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாம்.அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், விருப்பத்தின் பேரில் மாணவர்கள் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது .10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்.தினசரி 50% மாணவர்கள், 50% ஆசிரியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது

 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.அப்பொழுது அவர் பேசுகையில், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது பற்றி மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது Join Telegram& Whats App Group Link -Click Here