10Th Std Employment Registration Start At Oct 23 


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வேலைவாய்ப்பு பதிவு  23. 10. 2020 அன்றிலிருந்து தொடங்கி  6 .11. 2020 வரை பதிவு பணிகள் மேற்கொள்ளபடும் என வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அந்தப் பள்ளியிலேயே ஆன்லைன் வழியாக பதிவு செய்யப்படும். 

அனைத்து மாணவர்களுக்கும் சான்று  வழங்கப்படும் 23. 10.  2020 நாள் முதல் 15 நாட்கள் வரை ஒரே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.

மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு செய்ய  ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் கட்டாயமாக பள்ளியில் தரப்பட்டும் படிவத்தில் பூர்த்திசெய்ய வேண்டும்.

மாணவனின் குடும்ப அட்டை .ஆதார் அட்டை மற்றும் பேன் கார்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை கண்டிப்பாக முகவரிக்கான அடையாள அட்டையாக கருதப்படும்.


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு 23 .10 .20 20முதல் தொடங்க இருப்பதால் 12 ஆம் வகுப்புக்கான வேலைவாய்ப்பு பதிவுக்கான கடைசி தேதியாக 22.10.2020  வரை மட்டுமே பதிவு செய்ய முடியும் என வேலைவாய்ப்பு துறை  அறிவித்துள்ளது.

10Th Std Employment Registration -2020


10Th Std Employment Registration 2020



Join Telegram& Whats App Group Link -Click Here