DSE – Proceeding  For  incentive As Per Go 116 

அரசு நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் 9.03.2020  முன்னால் உயர் கல்வி தகுதி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் பெறாத விவரம் கோருதல் இயக்குநர் செயல்முறை


உயர் கல்வி தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விவரங்கள்


அரசாணை (நிலை) எண் 37 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை(FR_IV) வெளியிடப்பட்ட நாளான 10 .3 .2020 க்கு முன்னர் (அதாவது 9 .3 .2020 வரை) உயர்கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசாணை (நிலை)எண்  325 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்ருத்த(பணியாளர்-A) துறை நாள் 9.4. 1983 அரசு கடிதம் (1டி)எண் 356 பள்ளிக்கல்வித்துறை நாள் 2. 11. 2007 மற்றும் அரசு கடித எண் 23339 /பக5(2)   2014 -4 15. 12. 2007 ஆகியவற்றுக்கு இணங்க ,சம்பந்தப்பட்ட பணியாளர் உயர்கல்வி பயில துறையின் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

தொடர்புடைய பல்கலைக்கழகம்/ பட்டம் அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இருக்க வேண்டும்

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில பல்கலைக்கழகங்களில் பெற்ற சான்றுக்கு இணைத் தன்மை (Equivalency) வழங்கிய தமிழக அரசால் அரசாணை வெளியிடபட்டிருக்க வேண்டும் அவ்வாறு இணைத் தன்மை வழங்கப்படாத சான்றுக்கு பரிசீலனை செய்யக் கூடாது

தொடர்புடைய பட்டம், ஏற்கனவே ஊக்க ஊதிய உயர்வு அளித்த நடைமுறையில் இருந்த அரசாணைப்படி தகுதி பெற்றதாக இருக்க வேண்டும்.

ஒரு ஆசிரியரின் மொத்த பணிக்காலத்தில் ஏதேனும் இரு உயர் கல்வி தகுதிகளுக்கு  ஏற்கனவே இரு ஊக்க ஊதிய உயர்வுகள் பெற்றிருந்தால் அந்த ஆசிரியரின் பெயர் பரிந்துரைக்கக்கூடாது.

உயர்கல்வி இறுதி தேர்வு கால அட்டவணை ,தேர்வு நுழைவுச் சீட்டு மற்றும் உண்மைத்தன்மை சான்று ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும்.

பணி ஓய்வு பெற்ற பின்னர்  உயர்கல்வி தேர்ச்சி பெற்ற ஆசிரியரின் பெயரை கண்டிப்பாக பரிந்துரைத்தல் கூடாது 

தகுதி பெற்ற எந்த ஒரு ஆசிரியர் பெயரும் விடக்கூடாது எதிர்காலத்தில் அவ்வாறு விடுபட்டது கண்டறியப்பட்டால் தொடர்புடைய  பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும்  முதன்மை முதன்மை கல்வி அலுவலர் முழு பொறுப்பாகும்


ஊக்க ஊதியம் தொடர்பான இயக்குநர் செயல்முறை நாள் 21.10.2020




Join Telegram& Whats App Group Link -Click Here