Ministry staff Incentive -DSE Proceeding


தமிழ்நாடு அமைச்சுப்பணி - சார்நிலை அலுவலருக்கான முன் ஊளதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல்


தமிழ்நாடு அமைச்சுப்பணி - சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 - 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊளதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் அதன் விபரம் பின்வருமாறு

அரசாணை (நிலை) எண். 37, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் (அ.வி. 1) துறை, நாள். 10.03.2020. படி இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 111 பணியாளர்கள் சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 தேர்ச்சி பெற்றமைக்காக வழங்கப்பட்டு வந்த ஒரு முன் ஊதிய உயர்வினை 10.03.2020 முதல் இரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட அரசாணை பத்தி 6 vi  ல் 10:03.2020க்கு முன்னர் கணக்குத் தேர்வு பாகம்-1  தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு நிதித்துறை ஒப்புதலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிருவாகத் துறை அனுமதி வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, 10.03.2020க்கு முன்னர் கணக்குத் தேர்வு பாகம்-1  தேர்ச்சி பெற்று முன்  ஊதிய உயர்வு வழங்கப்படாத இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 111 தொடர்பான விவரங்களை   05.11.2020க்குள் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  என அந்த சுற்றறிக்கை யில்  தெரிவிக்கப்பட்டுள்ளது

 

DSE Proceeding  Ministry staff Incentive Pdf 


Join Telegram& Whats App Group Link -Click Here