NEET 7.5% Reservation Set For Govt School Student
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் இருக்கிறது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது. ஆளுநரின் ஒப்புதல் கிடைக்க கால தாமதமாவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடஒதுக்கீடானது அனைத்து இளங்களை படிப்புகளான MBBS/BDS/Ayurveda போனற படிப்புகளுக்கு பொருந்தும் .
இந்த 7.5% இடஒதுக்கீடானது தமிழக் கல்வி துறையில் உள்ள ஊராட்சி ஒன்றைய நடுநிலை பள்ளி/ஆதிதிராவிடர் நலப்பள்ளி நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளி / மற்றும் பிற துறை அரசு பள்ளியில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மட்டுமேபொருந்தும்.
இந்த 7.5% இடஒதுக்கீடானது அனைத்து அரசு மருத்துவகல்லூரி மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள அரசு இட ஒதுக்கீடுகளுக்கும் பொருந்தும் என அந்த அரசாணையில் தெரிவிக்கபட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..