நீதிமன்ற வழக்குகள் காலதாமதம் செய்யப்பட்டால்  சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளரிடமிருந்து  நிதி இழப்பு வசூலிக்கப்படும் மேலும் ஒவ்வொரு வழக்கிற்கும் வழக்கு  சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரே முழு பொறுப்பாகும்- பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களின் உத்தரவு


பள்ளிக்‌ கல்வித்‌ துறைக்கெதிராக தொடரப்படும்‌ வழக்குகள்‌ மீது உரிய காலகெடுவிற்குள்‌ துரித நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும்‌, வழக்குகளைத்‌ தொடர்ந்து கண்கானிக்கத்‌ தவறும்‌ நேர்விமும்‌ துறைக்கு பாதகமாகத்‌ தீர்ப்புகள்‌ பெறப்படுகின்றன.

அவ்வாறானத்‌ தீர்ப்புகளின்‌ மீது தொடர்புடைய விதிகளைக்‌ குறிப்பாக சுட்டிக்காட்டி தெளிவாக மேல்முறையீடு, சீராய்வு மற்றும்‌ சிறப்பு விடுப்பு மனு ஆகியவை உடனுக்குடன்‌ தாக்கல்‌ செய்யப்படாமல்‌ நிர்வாக நலனுக்கு முரணாகத்‌ திட்டமிட்டே காலந்தாழ்த்தி தாக்கல்‌ செய்யும்‌ நிலையில்‌ நீதிமன்றங்களால்‌ அவை ஏற்க்கப்படாமல்‌ தீர்ப்பு வழங்கப்படுவதால்‌ பல்வேறு
 , வழக்குகளில்‌ அரசுக்கு வீணான நிதி இழப்பு ஏற்படும்‌ நிலை  உருவாகியுள்ளது. அவ்வாறான தீர்ப்பகளை பின்தொடர்ந்து பலரும்‌ வழக்கு தொடர்ந்து ஆணைப்‌ பெறுகின்றனர்‌.

இம்மாதிரியான அலட்சியமான செயல்பாடுகளால்‌ அரசளவில்‌ உயர்‌ அலுவலர்களுக்கு அவப்பெயர்‌ ஏற்படுவதோ நிர்வாகத்திலும்‌ தேவையற்ற இடர்பாடுகள்‌ ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடுகிறது


எனவே வரும்‌ காலங்களில்‌ அலுவலர்‌ மற்றும்‌ பணியாளர்களது கவனக்‌ குறைவால்‌  து றை பாதமமாக்  தீர்பாக பெறப்படும் நேர்வுகளில் தொடர்புடைய வழக்குக்கு ஆகும் செலவினத் தொகையுடன் அரசுக்கு ஏற்படக்கூடிய நிதியிழப்பு
முழுவதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடமிருந்தே பெறப்படும் என்பதுடன் ஒவ்வொறு வழக்கிறகும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரே முழுபொறுப்பாவார்கள் எனவும் திட்டவட்டமாக அறிவுறுத்த்த படுகிறது . இதில் எவ்வித விளக்கங்களும் ஏற்கப்பட்மாட்டாது 










Join Telegram& Whats App Group Link -Click Here