Volunteer Teacher's Guide For - கற்போம் எழுதுவோம் இயக்கம்
கற்போம் எழுதுவோம் இயக்கம் -தன்னார்வல ஆசிரியர் கையேடு
தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உயர்த்த, அனைவரும் கல்வி பெற பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் "கற்போம் எழுதுவோம் இயக்கம்" எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக "அடிப்படை எழுத்தறிவு நூல்" என்ற ஒரு நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த நூலை எவ்வாறு தன்னார்வல ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், கற்போர்க்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதனை இந்த ஆசிரியர் கையேட்டில் கூறப்பட்டுள்ளது. பல விழிப்புணர்வு பாடல்கள், கதைகள், புதிர்கள், விடுகதைகள் போன்றவையும் கொடுக்கப்பட்டுள்ளன.இவைகளைப் பயன்படுத்திதன்னார்வலஆசிரியர்கள் கற்போர்க்கு கற்றுக்கொடுக்க இந்த ஆசிரியர் கையேடுஉதவியாக இருக்கும்
திட்டத்தின் நோக்கம்.
- முழு எழுத்தறிவுப் பெற்ற மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்குதல்.
- 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதவர்களுக்கு எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைக் கற்றுத் தருதல்.
- கற்போர்க்கு தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் கல்வி கற்க, உரிய வாய்ப்பினையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி நம் சமுதாயத்தை மேம்பாடடையச் செய்தல்.
Volunteer Teacher Module In Pdf
தன்னார்வல ஆசிரியர்கள் "2" மணி நேரத்தைக் கீழ்க்கண்டவாறு திட்டமிட்டுக் கொள்ளலாம்.
- கற்போர்கள் ஒன்று கூடுதல் மற்றும் கற்போர்களைக் கற்கும் சூழ்நிலைக்குக் கொண்டு வருதல். - 20 நிமிடம்
- கற்போர்களிடம் கலந்துரையாடல் பொதுவானது (செய்தித்தாள், உள்ளூர் சம்பவம், தனிப்பட்ட முறையிலானது). - 20 நிமிடம்
- கற்றல் கற்பித்தல் எழுத்தறிவு, எண்ணறிவு. - 45 நிமிடம்
- விழிப்புணர்வுக் கருத்துக்கள் பாடம் தொடர்பானது. - 20 நிமிடம்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..