Pensioners’ Portal  New user Registration Guidelines 


ஓய்வூதியர்கள் தாங்கள் ஒய்வூதியம் பெறும் அலுவலகத்தில் உள்ள தங்கள் ஓய்வூதியம் குறித்த சுய விவரம் ,மாதா மாதம் வழங்கப்படும் ஒய்வூதியம் , அகவிலைப்படி உயர்வு , வாரிசு நியமனம் போன்ற தகவல்களை இணைய தளம் வழியாக வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளலாம் . அது எவ்வாறு அறிந்த்து கொள்வது என்பதை பற்றி நாம் இந்த  பதிவில் பார்போம் 

தேவையானவை 

1. இணையதள வசதியுடன் கணிணி அல்லது ஆண்ட்ராய்ட் செல் போன் 
2. PPO Number 
3. PAN Number or Date Of Birth 
4. Mobile Number 

Step-1 

Google search  சென்று  https://tnpensioner.tn.gov.in/    என Type செய்ய வேண்டும் 

 Step-2

கீழே உள்ள படத்தில் உள்ளவாறு திரை தோன்றும்  அதில் உள்ள   Login கட்டத்திறகு கீழே உள்ள New User?/Register Here என்பதை  click செய்யவும் 

Pensioners’ Portal  New user Registration



Step- 3

New User?/Register Here என்பதை  click செய்தாள்   கீழே உள்ள திரை தோன்றும் 


Pensioners’ Portal  New user Registration


1.முதல் கட்டத்தில்  PREFIX கட்டத்தில் PPO எண்ணிற்கு முன் உள்ள முதல் எழுத்தை (உதாரணமாக PPO எண் A0123445 என்று இருந்தால் PREFIX- ல் A டைப் செய்ய வேண்டும் ) டைப் செய்ய வேண்டும் 


2. இரண்டாவது கட்டத்தில்  PPO எண்ணை டைப் செய்ய வேண்டும். PPO எண்ணுக்கு  பின்னால் உள்ள Suffix சேர்க்கக் கூடாது. உதாரணத்திற்கு ,A0123654 / EDN  என்று இருந்தால் / EDN - ஐ சேர்க்கக் கூடாது.

3. மூன்றாவது கட்டத்தில் PAN எண் அல்லது நான்காவது கட்டத்தில் பிறந்த தேதி இதில் ஏதாவது ஒன்றை பூர்த்தி செய்தால் போதும். இரண்டு கட்டத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. PAN எண் அல்லது பிறந்த தேதி Match ஆகவில்லையென்றால் Invalid Credentials  Treasury என்று வரும். அப்போது தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

4. ஐந்தாவது கட்டத்தில் ஏற்கெனவே தாங்கள் ஒய்வூதியம் பெறும் அலுவலகத்தில் அளித்திருந்த செல் நம்பரை டைப் செய்ய வேண்டும்.

5. ஆறாவது கட்டத்தில் தாங்களே ஒரு  Password உருவாக்க வேண்டும். (அது  8 Character- லிருந்து 20 Character வரை இருக்க வேண்டும்) Password -ல் எழுத்துக்கள், எண்கள் மற்றும் Special Chatrater (# ? ! @ $ * ^ &) இதில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.

 உதாரணத்திற்கு தங்கள் பெயரில் உள்ள முதல் 4 அல்லது 5 எழுத்துக்களை  Small letter  ல் போட்டு  Special Character @ சேர்த்து 2020 என்று டைப் செய்து (உதாரணத்திற்கு ஒருவர் பெயர்  K.Rajagopal என்று வைத்துக் கொண்டால் rajaaK@2020 ering Password உருவாக்கி வைத்துக் கொள்ளலாம்). (Password ஐ மறக்கக் கூடாது. ஒய்வூதியப் புத்தகத்தில் கடைசி பக்கத்தில் எழுதி வைத்துக் கொள்ளலாம்.  

இன்னொரு முறையிலும் Password உருவாக்கலாம்.

 தங்கள் PPO  எண்ணில் உள்ள  Prefix  எழுத்துக்கு பிறகு @ ஐயும் சேர்த்து அதாவது ஒருவருடைய PPO எண் . A1236547 என்று இருந்தால் A@1236547 என்று  Password உருவாக்கலாம்.

6. ஏழாவது கட்டத்திலும் அதே  Password  ஐ டைப் செய்ய வேண்டும்.
எட்டாவது கட்டத்தில் அந்த கட்டத்திற்கு மேல் உள்ள சாய்ந்த எழுத்துக்களை (சில சமயம் எழுத்துக்களும் எண்களும் கலந்து வரும்) டைப் செய்ய வேண்டும்.

7.எட்டாவது கட்டத்திற்கு கீழுள்ள  Submit  செய்ய வேண்டும்.
Submit  செய்தவுடன் Registered Successfully OK என்று கொடுத்தவுடன் மீண்டும் Pensioner's Portal வந்துவிடும். 


Pensioners’ Portal  New user Registration

Pensioners Login -வந்தவுடன் Prefix/PPO No . ஏற்கெனவே தாங்கள் உருவாக்கிய Password, Enter Code Captcha  இவற்றை டைப் செய்து Login  click  செய்தால் அவரவர் Pensioner's Portal செல்லும்..


After successful login, you may able to view and verify all the details as shown below.


1. Pensioner Details
2. Nominee Details (If available)
3. Monthly Pension Slip
4. Annual Pension Drawn details
5. ECS Status for all the Pension payment done through Treasury.
6. Commutation Details (If available)
7. Additional Pension (Date of effect of 80 years) and etc.,


Pensioners’ Portal Help Document for New user Registration in Pdf 




Join Telegram& Whats App Group Link -Click Here