குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு  - இணையவழி பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21 ஆம் கல்வி ஆண்டு -பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு (Safety & Security for Elementary and Secondary) - ஆசிரியர்களுக்கு ஒரு நாள் இணையவழி பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல்

2020 -21 ஆம் கல்வியாண்டில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும்'தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் “பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம்'' சார்ந்து பயிற்சி வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதன் உயரிய நோக்கம், உலக அளவில் கோவிட் - 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான தற்போதைய சூழலில், பள்ளி மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பள்ளிக்கு வருவதை உறுதிபடுத்துவதும், தன்சுத்தத்துடனும், பாதுகாப்பு உணர்வுடனும் கல்வி குற்கும் சூழலை பள்ளிகளில் ஏற்படுத்துவதும் ஆகும். இதற்காக அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

மேற்காண் பயிற்சியினை, இணையதள வழியாக கீழ்காணும் தலைப்புகளோடு தொடர்புடைய கோவிட் - 19 நோய்த்தொற்று பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு வழங்கவும், பயிற்சி கட்டகமும் வழங்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள்

2. மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்
3. மானாவர்களின் உளவியல் சார்ந்த பாதுகாப்பு அம்சங்கள்
4. மாணவர்களின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கும் கடமைகளும்.
பயிற்சியானது இணையதள வழியாக – TNTP Portal மூலமாக, கோவிட் - 19 நோய்த்தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  QR code உடன் கூடிய விழிப்புணர்வு video , ஆசிரியர்களுக்கான Assement Tool  ஆகியவற்றை உள்ளடக்கியவாறு 16.12.2020 முதல் 22.12.2020 வரை கீழ்க்கண்ட தேதிகளில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்கள்      – 16.12.2020
அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்  – 17.12.2020
அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள்              – 18.12.2020 & 19.12.2020
அனைத்து இடைநிலை ஆசிரியர்கள்         -21.12.2020 & 22.12.2020

Proceedings Safety & security training to teachers   Download 

ஆசிரியர் வழிகாட்டுதல் 


1. பயிற்சியில்  கலந்து கொள்ள ஆசிரியர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில், அவர்களது இருப்பிடத்திலிருந்தே எந்த நேரத்திலும்,TNTP Portal மூலமாக அதாவது tntp.tnschool.gov.in  என்ற இணையதள முகவரியில் சென்று தங்களது username, password @ Type  (Recommended browser - Google Chrome ).

2. ஆசிரியர்களுக்கான username, password  ஆனது EMIS Portal - School login - Staff details - இல் கிடைக்கும். ஆசிரியர்கள் தங்கள் பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக இதனைத் தெரிந்து கொள்ளலாம்.

3. அதன்பிறகு  TPD என்ற Menu – ல் Training Session — click செய்து Safety and Security பயிற்சியினை தொடங்கவும்.

4. பயிற்சியின் போது QR Code உடன் கூடிய விழிப்புணர்வு Videos, ஆசிரியர்களுக்கான assement Tool  போன்றவையும் இடம்பெறும். பயிற்சியில் முழுவதும் கலந்து கொண்டபின் assessment tool- இல் இடம்பெற்றுள்ள வினாக்களுக்கு ஆசிரியர்கள் விடையளிக்க வேண்டும். இதிலிருந்து பயிற்சியின் தாக்கம் ஆசிரியர்களை சென்றடைந்த விதம் மதிப்பீடு செய்யப்படும்.

5. இப்பயிற்சியில் ஆசிரியர்கள் Laptop, Computer, Mobile phone ஆகியவற்றின் வாயிலாகக் கலந்து கொள்ளலாம்.

6. ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற பயிற்சியினை பள்ளிகள் திறந்தபிறகு மாணவர்களிடையே கொண்டு சேர்த்து அவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.

7. ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட விவரங்கள் மாநிலத்திலிருந்தும் EMIS  Portal வழியாகக் கண்காணிக்கப்படும்.

8. பயிற்சியின் தாக்கம் மாணவர்களைச் சென்று சேர்ந்ததை உறுதிப்படுத்த மாணவர்களுக்கான Assessment  நடத்துவதற்கு சூழ்நிலைக்கேற்ப உரிய தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.


Join Telegram& Whats App Group Link -Click Here