பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு –அமைச்சர் தகவல்


கொரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் திறக்கபடவில்லை , மாணவர்கள் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைகாட்சி வழியாக பாடங்கள் கற்று வருகிறார்கள்.

நடப்பு கல்வியாண்டு பூஜ்ய கல்வியாண்டாக அறிவிக்க வாய்ப்பில்லை என உறுதியாக கல்வி அமைச்சர் தெவித்துள்ளார். பொது தேர்வு எழுதும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவனை தேர்தல் நாள் பற்றி அறிவிப்பு வந்த பிறகு முதல்வர் உடன் கலந்து ஆலோசித்து பின்பு வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார்.

இன்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், சிறப்பு வகுப்புக்கு முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்Join Telegram& Whats App Group