Online counselling for Computer Instructors
முதுகலை கணினி பயிற்றுநர் தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 28.12.2020 அன்று வெளியிடபட்டது இதனை தொடர்ந்து அவர்களை பணிநியமனம் செய்வதறகான கல்ந்தாய்வு தேதி மற்றும் அதன் தொடர்பான விபரங்களை பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ளது
2018-2019ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநர் நிலை-1 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய கடிதத்தின்படி பெறப்பட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ள பணிநாடுநர்களுக்கு பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு EMIS இணையதளம்மூலம் வரிசை எண். 1 முதல் 400 வரை 02.01.2021 அன்றும், வரிசை எண். 401முதல் 742 வரை 03.01.2021 நாட்களில் நடைபெற உள்ளது.
- கலந்தாய்வு மாவட்ட அளவில் EMIS இணையதளம் வழியாக நடைபெறும் .
- பணிநாடுவர்கள் அனைவரும் தங்களுடை ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு, அசல் கல்விச் சான்றிதழ்கள்,சாதிச் சான்று மற்றும் இதர சான்றிதழ்கள் அதன் நகல் எடுத்து வர வேண்டும்
கலந்தாய்வு நடைபெறும் நாள்
- வரிசை எண் – 1 முதல் 400 வரை – 02.01.2021
- வரிசை எண் - 401 முதல் 742 வரை -03.01.2021
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..