IIT/ JEE Online Free coaching – DSE proceedings
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவு (11 மற்றும் 12-ஆம் வகுப்பு) பயிலும் மாணவர்கள் தேசிய அளவில் தேசிய தேர்வு முகமையால் (National Testing Agency) நடத்தப்பட்டு வரும் ஐ.ஐ.டி மற்றும் ஜே.இ.இ (IIT and JEE) போட்டித் தேர்வுகளில் கலந்துக்கொண்டு இந்திய தொழில்நுட்பக் கழக கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர்கல்வி பயிலுவதற்கு ஏதுவாக டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் M/s.Nextgen Vidhya Pvt. Ltd., நிறுவனம் மூலம் இலவச இணையவழி பயிற்சி அரசு சார்பாக வழங்க திட்டமிடபட்டுள்ளது
இப்பயிற்சி கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் வழங்கப்படும். மேலும், இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்களிடமோ, அவர்களது பெற்றோரிடமோ இப்பயிற்சிக்கென எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.
இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களைப் பயிற்சி நடைபெறும்போதே கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு தனித்தனியே Login ID மற்றும் Password வழங்கப்படும். மேலும் பள்ளி ஆசிரியர், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பள்ளித்தலைமையாசிரியர் ஆகியோருக்கும் மாணவர்கள் பயிற்சி பெறுவதைக் கண்காணிக்கும் வகையில் Login ID மற்றும் Password வழங்கப்படும்.
மேலும் இப்பயிற்சிக்கான இணையதளம் https://play.google.com/store/apps/details?id=com.vidhyaeduation.android வாயிலான பதிவு 21.12.2020 முதல் 31.12.2020 வரை நடைபெறும். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 04.01.2021 முதல் தொடங்கும். . இப்பயிற்சியினைப் பெற விரும்பும் மாணவர்கள் தஙகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது முதுகலை ஆசிரியரை தொடர்பு கொண்டு இணையத்தில் பெயர் பதிவு செய்யலாம் .
DSE proceedings - IIT/ JEE Online Free coaching
குறிப்பு : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..