NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS)  -2020 


8  ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் திட்டத்தின் கீழ் படிப்பு உதவி தொகைக்கான வட்டார அளவில் தேர்வு 21.02.2021 அன்று நடை பெற உள்ளது . 

அதற்கான விண்ணப்பம் 28.12.2020 முதல் 08.01.2021 வரை தங்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் விண்ணப்பம் பெற்று  அல்லது இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேர்வுக்கு மாணவர்கள் பெயர் பதிவு செய்துகொள்ளாலாம்.


NMMS  முக்கியமான நாட்கள் :

  • வெற்று விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டிய நாட்கள் -28.12.2020 முதல் 08.01.2021 வரை
  • விண்ணப்பம் தேர்வர்களிடமிருத்து பெற கடைசி நாள் :08.01.2021
  • இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாள் : 05.01.2021 -12.01.2021
  • தலைமையாசிரியர் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும் நாள் :20.01.2021
  • தேர்வு நாள் : 21.02.2021

NMMS DGE Notification -2020-21 Pdf 

NMMS Application Form -2020-21 Pdf 

Previous Year Question Paper And Answer Key 

NMMS Study material Collection 


NMMS  தேர்வு குறித்த விபரங்கள் 

1. தகுதி

1. அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இக்கல்வி ஆண்டில் 8 ஆம் வகுப்பு பயில வேண்டும்.
2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1,50,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. உதவித் தொகை:

தேர்வில் வெற்றி பெறும் மாணவ /மாணவியருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12 (+2) வகுப்பு வரை ஆண்டிற்கு ரூ.12000/- உதவித்தொகை வழங்கப்படும்.

3. NMMS  விண்ணப்பிக்கும் முறை:

 இத்தேர்வில் பங்கு பெற மாணவ /மாணவிகள் தாம் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.

4.தேர்வுக் கட்டணம்:

 ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) விண்ணப்பப் படிவத்துடன் பணமாக பள்ளியின் தலைமையாசிரியரிடம் செலுத்த வேண்டும்.

5.தேர்வு முறை:

இத்தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது.
  •  பகுதி I– மனத்திறன் தேர்வு (Mental Ability Test) (MAT)
  • பகுதி II- படிப்பறிவுத் தேர்வு ( Scholastic Aptitude Test) (SAT)

6. பாடத்திட்டம்:

படிப்புதவித் தேர்வு பகுதி I மற்றும் IIனைப் பொறுத்தமட்டில் ஏழாம் வகுப்பிற்குரிய முழுப்பாடமும், எட்டாம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான பாடப்பகுதி முழுவதும் பயில வேண்டும். இப்பகுதியில்
  • கணிதம் 20,
  • அறிவியல் 35,
  • சமூக அறிவியல் 35
மொத்தம்  90 வினாக்கள் கேட்கப்படும்.

மனத்திறன் தேர்வைப் பொறுத்த மட்டில் பாடப்பகுதி நிர்ணயமில்லை. இப்பகுதியில் 90 கேள்விகள் கேட்கப்படும்.

Join Telegram& Whats App Group