TNPSC – புதிய நடைமுறை  தவறினால் 5 மதிப்பெண் குறைக்கப்படும் 


தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிய நடைமுறை ஒன்று (செய்திகுறிப்பு 56/2020 நாள் 30.12.2020) ன் படி அறிமுகபடுத்தி உள்ளது . இந்த நடைமுறையானது தேர்வுகளில் நடக்கும் முறை கேடுகளை தடுக்கும் பொருட்டு கொண்டுவரபட்டுள்ளது.இந்த நடைமுறை ஜனவரி 3 ஆம் தேதி நடைபெறும் குரூப்1 தேர்வு முதல்  அமல்படுத்தப்படுகிறது 

புதிய நடைமுறை பற்றிய விபரங்கள் 

  • காலை 9.30 மணிக்குள் தேர்வுக் கூடத்திற்க்கு சென்றடைய வேண்டும் ,பிறகு வரும் தேர்வர்கள் யாரும் தேர்வு கூடத்திற்கு நுழைய அனுமதி இல்லை 
  • விடைத்தாள் விவரங்களை பூர்த்தி செய்ய கருப்பு நிற  மை உடைய பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் , பென்சில் மற்றும் பிற நிற பேனாக்கள் அனுமதி இல்லை 
  • விடைத்தாளில் இரண்டு இடங்களில் கையப்பமிட்டு இடது பெருவிரல் ரேகையினை பதிக்க வேண்டும் 
  • வினாத்தாளில் விடை தெரியவில்லை என்றால் விடை தாளில் (E)  என்ற வட்டத்தை கருமையாக்க வேண்டும்.
  • தேர்வு முடிந்த பிறகு  1.00 மணி முதல் 1.15 வரை  கூடுதல் நேரம் 15 நிமிடம் , அந்த 15 நிமிடத்தில்  விடை தாளில் (A) (B) (C),(D) & (E) ஓவ்வொறு விடைக்கும் எத்தணை வட்டங்கள் கருமையாக்கபட்டுள்ளன என  மொத்த எண்ணிக்கை தவறில்லாமல்  நிரப்ப வேண்டும் , தவறாகும் பட்சத்தில்  தேர்வர் பெறும் மதிப்பெண்களிலிருத்து  5 மதிப்பெண் குறைக்கப்படும்.என தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 



Join Telegram& Whats App Group