தைப்பூசத் திருவிழா இனி  பொது விடுமுறை   - தமிழக அரசு அறிவிப்பு 


தமிழ்க் கடவுளாகிய முருகனைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை பரிசீலித்து, வரும் ஜனவரி 28-ம் நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும்  உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்மைச்சர் தெரிவித்துள்ளார்.
 

தைபூசம் அரசு பொதுவிடுமுறை - Go No 7 Date -05.01.2021


Join Telegram& Whats App Group