பிப்ரவரி 8 முதல் Whats App New policy 


கடந்த சில தினங்களாக உங்கள் வாட்ஸ் அப் யில்  பாப் அப் விண்டோ தோன்றும் அதில் சில தகவல் இடம் பெற்றிருக்கும்   அதற்கு கீழே  Not Now ,Agree போன்ற Button காணபடும் .  இது போன்ற தகவல் நமக்கு ஏன் வருகிறது என பலருக்கு குழப்பம் இருக்காலம் . அதற்கான காரணம் மாற்றும் அதில் கொடுக்கபட்டுள்ள விபரங்கள் பற்றி இங்கு காண்போம்.
இந்தப் புதிய Privacy Policy ல் இருக்கும் முக்கியமான விதிகள்


1.WHATSAPP ல் நீங்கள் அனுப்பும் Message யை அந்த நிறுவனம் சேகரித்துக் கொள்ளும்.அதை FACEBOOK யை சார்ந்துள்ள அவர்களின் நிறுவனத்திற்கு வணிக முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள் 
எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் நண்பருடன் அனுப்பும்  செய்தியை (Message) WHATSAPP நிறுவனம் எடுத்து FACEBOOK , INSTAGRAM etc., போன்ற அவர்களின் வலைத்தளத்தை நீங்கள் பயன்படுத்தும்.நீங்கள் அனுப்பிய செய்திகள் சம்பந்தமாக  விளம்பரங்களைத் உங்களுக்கு  தருவார்கள்.

2.நீங்கள் அனுப்பும் forward messages யை இதுவரை WHATSAPP சேகரிக்கவில்லை. ஆனால் இனிமேல் அந்த forward messages யும் தங்களது சர்வரில் (Server ) WHATSAPP நிறுவனம் சேகரித்துக் கொள்வார்கள்

.3.WHATSAPP ல் இருக்கும் Features (அம்சங்களை ) பயன்படுத்த வேண்டும்
 என்றால் அவர்களின் Privacy Policy க்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும்.அவர்கள் நீங்கள் பயன்படுத்தும் Features ல் உள்ள தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
(For Ex.) எடுத்துக்காட்டாக உங்கள் நண்பருக்கு அனுப்பும் Voice message (குரல் செய்தி )யும் கூட சேகரிப்பார்கள்.

4.நீங்கள் அனுப்பும் செய்தி செல்லவில்லை என்றாலோ அல்லது அதை நீக்கி விட்டீர்கள் (Delete) என்றாலோ அந்த செய்தி அங்கு நீக்கப்படாது .அது WHATSAPP நிறுவனத்தின் Server ல் 30 நாட்கள் சேகரித்து வைக்கப்படும். 30 நாட்களுக்குப் பின் நீக்கப்படும்.

5.WHATSAPP நிறுவனம் உங்களிடமிருந்து எடுக்கும் தகவல்கள் என்னவென்றால் நீங்கள் என்ன Mobile பயன்படுத்துகிறீர்கள் மற்றும் அதில் இருக்கும் OS (android or IOS ) என்னவென்றும் என்ன சிம் பயன்படுத்துகிறீர்கள் அதன் நம்பர்,எவ்வளவு சிக்னல் (signal ) உள்ளது,பேட்டரியின் அளவு நீங்கள் என்ன Browser பயன்படுத்துகிறீர்கள் என்றும் சேகரிப்பார்கள். உங்கள் Mobile ன் IP Address,Time Zone, Language போன்ற பல தகவல்களை சேகரிக்க உள்ளனர்.

6. நீங்கள் புதிதாக வந்த WHATSAPP PAYMENT யை பயன்படுத்துகிறீர்கள் என்றால் யாருக்கு நீங்கள் பணம் அனுப்புகிறீர்கள் என்ற தகவல்களையும் சேகரிக்க உள்ளனர்.நீங்கள் Privacy Policy மற்றும் Terms Of Service ஒப்புதல் (agree) கொடுத்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம். எனவே ஒப்புதல் (agree) கொடுப்பதற்கு முன் நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள்.

Join Telegram& Whats App Group