12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு Whatsapp வழி தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.


மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் அரசு தேர்வுத் துறை இயக்குநரின் 12.05.2021 நாளிட்ட இணைய வழி கூட்ட அறிவுரைகளின் படி உள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  திருப்புதல் தேர்வு /அலகுத்  தேர்வு இணையம் வழியாக (Whatsapp)நடைபெறும் என அந்த அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவர்களால் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது  , மேலும் தேர்வுக்கான கால அட்டவணை தேர்வு நடைபெற வேண்டிய வழிமுறைகள் பற்றி சுற்றிக்கையில தெரிவிக்கபட்டுள்ளது .

CEO Madurai Dist 12Th Unit Test Exam  Time Table And Instruction 

CEO Thiruvarur Dist 12Th Unit Test Exam  Time Table And Instruction 

CEO Thiruvanamalai  Dist 12Th Unit Test Exam  Time Table And Instruction 


தேர்வின் போது  மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் 

01.தேர்வு நடைபெறும் அன்று காலை 9.50 மணிக்கு தேர்விற்கான வினாத்தாளினை தலைமையாசிரியரிடமிருந்து பெற்று மாணவர்களுக்கு Whatsapp மூலம் அனுப்புதல் வேண்டும்.

02.மாணவர்களை மடிக்கணினிகள் / கைபேசி மூலம் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து தனித்தாளில் விடைகளை எழுத  வேண்டும்.

03.விடைத்தாளில் முதல் பக்கத்தில் மாணவர் பெயர் பதிவு எண் (அரசுத் தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட எண்) பாடம் மற்றும் நாள் விவரங்கள் மாணவரால் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.

04.இறுதியில் மாணவர் கையாப்பம் மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் கையொப்பம் பெறுதல் வேண்டும்.

05.எழுதப்பட்ட விடைத்தாட்களை Adobe Scan App மூலம் படம் பிடித்து.  Pdf கோப்பாக    Whatsapp  மூலம் பாட ஆசிரியர்களுக்கு அனுப்புதல் வேண்டும். மாணவர்கள் விடைத்தாட்களை image file ஆக அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

06.எழுதப்பட்ட விடைத்தாட்களை மாணவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

07.பாட ஆசிரியர்  Whatsapp மூலம் பெறப்பட்டவிடைத்தாட்களை Whatsapp லேயே திருத்தம் செய்து உரிய மதிப்பெண்களை Whatsapp Type செய்தல் வேண்டும்.

08. Whatsapp இல் திருததப்பட்ட விடைத்தாட்களை மாணவர்களுக்கு Whatsapp மூலம் அனுப்புதல் வேண்டும்.

09.பயன்படுத்தப்படும் இந்த Whatsapp Group ல் வினாத்தாட்கள் மற்றும் விடைத்தாட்கள் மட்டுமே இருத்தல் வேண்டும்.

10.ஓவ்வொரு நாளும் தேர்வு முடிவுற்றவுடன் மாணவர் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியருக்கு விடைத்தாளில் தேர்வு எழுதிய பக்கத்தினை படம் பிடித்து, ஞனக (Pdf (Adobe Scan App ஆக மாற்றம் செய்து Whatsapp மூலம் அனுப்பப்பட வேண்டும்.

11.மாணவர்கள் விடைத்தாட்களை பாட வாரியாக அடுக்கி மாணவர்களை பள்ளிக்கு நேரிடையாக வருகை புரிய அரசு அறிவிக்கும் நாளில் விடைத்தாளினை ஆசிரியரிடம் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்..