EL  suspension  For One year  Go NO 48 Date 13 05 2021

அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்திவைப்பு..! தமிழக அரசு அறிவிப்பு.


அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2022 மார்ச் 31 தேதி வரை ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை தவிர்க்கும் வகையில் அரசு தரப்பில் முடிவு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிதிச்சுமை காரணமாக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓர் ஆண்டுக்கு அதாவது 2021 மார்ச் 31 வரை நிறுத்திவைக்கப்படுவதாக கூறி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 


முன்னதாக, கொரோனா 2 வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதே சமயம் தடுப்பூசி போடும் பணியினையும் தீவிரப்படுத்தியுள்ளது. முதல்வர் மு..ஸ்டாலின் ஏற்கனவே கொரோனா பணி நிவாரண நிதி வழங்க மக்களிடம் கோரிக்கை வைத்த நிலையில் பலர் தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது கொரோனா சூழலில் ஏற்பட்டுள்ள நிதிசுமையை சமாளிக்க அரசு இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.