1 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி இயக்குநர் செயல்முறை 

2020 - 21ஆம்‌ கல்வியாண்டில்‌ அனைத்து வகைப்‌ பள்ளிகளில்‌ 1ஆம்‌ வகுப்பு முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை பயின்ற மாணவர்கள்‌ அனைவரும்‌தேர்ச்சி பெற்றதாக தொடக்கபள்ளி இயக்குநர் சுற்றறிக்கை அணுப்பியுள்ளார்  

தமிழகத்தில்‌ மாநில பாடத்திட்டத்தின்‌ கீழ்‌செயல்படும்‌ அனைத்து அரசுப்‌ பள்ளிகள்‌, அரசு உதவி பெறும்‌ பள்ளிகள்‌, மெட்ரிகுலேசன்‌பள்ளிகள்‌ மற்றும்‌ சுயநிதிப்‌ பள்ளிகளில்‌ 9-ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணாக்கர்கள்‌ அனைவரும்‌முழு ஆண்டுத்‌ தேர்வு மற்றும்‌ 10, 11-ஆம்‌ வகுப்புகளில்‌ பயிலும்‌ மாணாக்கர்கள்‌ அனைவரும்‌பொதுத்‌ தேர்வுகள்‌ ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதன்‌ அடிப்படையில்‌ அனைத்து வகைப்‌ பள்ளிகளில்‌ 1ஆம்‌ வகுப்பு முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை பயின்ற மாணவர்கள்‌ அனைவரும்‌ தேர்ச்சி பெற்றதாக சார்ந்த மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களால்‌ தங்கள்‌ ஆளுகைக்குட்பட்ட அனைத்து வகைப்‌ பள்ளிகளின்‌ தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கும்மாறு கூறியுள்ளார்.

1ஆம்‌ வகுப்பு முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை பயின்ற மாணவர்கள்‌அனைவருக்கும்‌ சார்ந்த பள்ளிகளின்‌ தலைமையாசிரியர்கள்‌ தங்கள்‌ பள்ளித்‌ தேர்ச்சிப்‌ பதிவேட்டில்‌ உரிய பதிவுகளை மேற்கொண்டு தொடர்‌ நடவடிக்கைகள்‌ எடுக்க தேவையான அறிவுரைகளை மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ மூலம்‌ வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ கேட்டுக்கொள்ளப்‌ படுகிறார்கள்‌.

DEE Proceeding All pass - 1 to 8 in 2020-21