புதிய பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு எவ்விதம் விநியோகம் செய்வது என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இன்று முதல் புதியா கல்வியாண்டு 2021-2022- தொடங்குவதால்  , இந்த கல்வியாண்டுகான 3 கோடியே 80 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள 120 கிடங்குகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவற்றை பள்ளிகளுக்கு எவ்வாறு வழங்குவது, மற்றும் மாணவர்களுக்கு எவ்வாறு விநியோகம் செய்வது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆணையர் நந்தகுமார், பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இயக்குநர் ஜெயந்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்

இதில், மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை பள்ளி ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் குறித்தும், அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற ஆலோசனையில், தற்போதைய பேரிடர் சூழலைக் கருத்தில்கொண்டு, மாணவர்களை நேரடியாக பள்ளிக்கு வரவழைக்காமல் பாதுகாப்பான முறையில் புத்தகங்களை விநியோகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.