OBC  Reservation Certificate Instructions


இந்திய அரசு வழங்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (Other Backward Classes) 27% இடஒதுக்கீடு - சாதிச் சான்றிதழ் வழங்குதல் தொடர்பான தமிழக அரசின் அறிவுரைகள்.

இந்திய அரசு பணியிடங்களுக்கான நியமனம் மற்றும் மத்திய அரசு கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு(OBC) வளமான பிரிவினரை(Creamy Layer) நீக்கி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்காண இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் இந்திய அரசு அறிவிக்கையாக  வெளியிடப்பட்டுள்ளது .மேலும் வளமான பிரிவினரை நீக்குவதற்கான வழிமுறைகள் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

வளமான பிரிவினரை நீக்கி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வருமான வரி கணக்கிடும் பொழுது ஊதியம் மற்றும் வேளாண் வருமானத்தை சேர்க்கக்கூடாது என வழிகாட்டுதல் நெறிமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு  முதல் ஆண்டு வருமான வரம்பு 8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஜாதி சான்றிதழ் வழங்கும் பொழுது வளமான பிரிவினர்  நீக்கம் செய்வது தொடர்பான பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 8 லட்சத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பதை கணக்கிடும் விளக்கமானது கொடுக்கப்பட்டுள்ளது.


உதாரணம் -1

பெற்றோரின் ஆண்டு வருமானம் கீழ்கண்டவாறு இருக்கும் சூழலில் 

  • ஊதிய வருமானம்                         :ரூ 3 லட்சம் 
  • வேளாண்மை வருமானம்       :ரூ 4 லட்சம் 
  • இதர வகையில்  வருமானம் : ரூ3  லட்சம்

மேற்கூறப்பட்ட மொத்த வருமானம் 10 லட்சம் என்பதில் ஊதிய வருமானத்தையும் வேளாண்மை வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் இதர வகையில் உள்ள வருமானத்தை மட்டும் அதாவது 3 லட்சம் என்பதை கணக்கில் கொண்டு அவர்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வழங்கலாம்.


உதாரணம் -2

பெற்றோரின் ஆண்டு வருமானம் கீழ்கண்டவாறு இருக்கும் சூழலில் 

  • ஊதிய வருமானம்                       :ரூ 25லட்சம் 
  • வேளாண்மை வருமானம்       : இல்லை 
  • இதர வகையில்  வருமானம் : இல்லை

மேற்கூறிய ஊதிய வருமானம் மட்டும் உள்ளது இந்த வருமானம் 8 லட்சத்திற்கு அதிகமாக இருப்பின் ஊதிய வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் அவர்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வழங்கலாம்.


OBC  Reservation Certificate  -அரசு முதன்மை செய்லாளர் கடிதம் எண் 1002988/பிநசிபி/2021 -1 நாள் 05.07.2021 


உதாரணம் -3

பெற்றோரின் ஆண்டு வருமானம் கீழ்கண்டவாறு இருக்கும் சூழலில் 

  • ஊதிய வருமானம்                        : இல்லை
  • வேளாண்மை வருமானம்       : ரூ 50லட்சம் 
  • இதர வகையில்  வருமானம் : இல்லை

மேற்கூறப்பட்டதில் வேளாண் வருமானம் மட்டுமே உள்ளது இந்த வருமானம் ரூ 8 லட்சத்தை கடந்து இருப்பினும், வேளாண் வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் அவர்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வழங்கலாம்.


உதாரணம் -4

பெற்றோரின் ஆண்டு வருமானம் கீழ்கண்டவாறு இருக்கும் சூழலில் 

  • ஊதிய வருமானம்                        : ரூ 4 லட்சம் 
  • வேளாண்மை வருமானம்       : ரூ 3 லட்சம்
  • இதர வகையில்  வருமானம் : ரூ 8.10 லட்சம்

மேற்கூறப்பட்ட இதர வகை வருமானம் ரூ 8 லட்சத்தை கடந்து இருக்கிறது .எனவே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது

என அரசு முதன்மை செயலாளர்  கடிதத்தில்  தெரிவிக்கபட்டுள்ளது