BRTE  Transfer  Counseling -2021

பள்ளி கல்வி துறையில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் குறு வள மையங்களில் பணிபுரிந்து வரும ஆசிரியர் பயிற்றுநர்களுகான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவது தொடர்பான அரசாணை 18.08.2021 அன்று வெளியிடப்பட்டது .  அந்த அரசாணையில் வகுக்கப்பட்டுள்ள சில நெறிமுறைகள் சார்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக 08.10.2021 அன்று வழங்கப்பட்ட தீர்பாணையின் அடிப்படையில்  பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட அனைத்து முதன்மைகல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 
 

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாள் மற்றும் இடம் 


நாள்   : 18.10.2021 காலை 9.00 மணி
இடம் : சார்ந்த முதன்மை கல்வி அலுவலகம் / அருகாமையில் உள்ள                        இடம் 



18.10.2021 அன்று BRTE களுக்கு சுழியக் கலந்தாய்வு ( Zero Vacancy Counselling ) நடக்க உள்ள நிலையில் அவர்களுக்கான வட்டார வள மையத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களின் காலி பணியிட விவரம் மற்றும் அவர்களது முன்னுரிமை பட்டியலில் உள்ள விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.





ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 18.10.2021 அன்று நடைபெற உள்ள பூஜ்ஜிய கலந்தாய்வுக்கான தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் (Temporary Priority List) வெளியீடு!!!


BRTE Temporary Priority List  


இன்று 15.09.2021  நடைபெறும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் சுமார் 2348 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மாவட்ட வாரியாகவும் பள்ளி வாரியாகவும் வெளியீடு!!!
 




ஆசிரியர் பயிற்றுநர் 500 பேர் பள்ளிகளுக்கு மாறுதல் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு!!!


BRTE Transfer  Counseling CSE  in Pdf DATE:13.09.2021


பள்ளிக் கல்வித் துறையில் 2021-2022ம் கல்வி ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணிமாறுதல் வழங்குதல், அதனைத் தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வு கீழ் கண்ட நாட்களில் நடைபெற உள்ளது 

  • பட்டதாரி ஆசிரியராக  - மாறுதல் -15.9.2021
  • ஆசிரியர் பயிற்றுநர் பொது மாறுதல் -20.9.2021


ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிமாறுதல் சார்ந்த அறிவுரைகள்

பணிமூப்பு அடிப்டையில் பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் செய்யப்படவேண்டிய மூத்த ஆசிரியர் பயிற்றுநர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து ஆசிரியர்  பயிற்றுநர்களும் பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதலுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வில் கலந்து கொள்ளாமல் இருந்தாலோ அல்லது இடத்தை தெரிவு செய்யாது இருந்தாலோ பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களால் காலியாக உள்ள ஒரு பள்ளிக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்படும். இதில் விருப்பமின்மை தெரிவித்தால் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

பணி மூப்பு அடிப்படையில்‌ பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர்‌ / மேல்நிலைப்‌ பள்ளிகளுக்கு  செல்ல உள்ள 500 ஆசிரியர் பயிற்றுநர்கள் விபரம் பாட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது 


500 BRTE  List All Subject in Pdf


ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் சார்ந்த அறிவுரைகள்


சிறப்பு முன்னுரிமையின் அழுப்படையில் மாறுதல் கோரும் ஆசிரியர் பயிற்றுநரிடம் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள உரிய சான்றிதழ் இருந்தால் மட்டுமே சிறப்பு முன்னுரிமைக்குப் பரிசீலிக்கப்பட வேண்டும்.

பொதுமாறுதல் கோரும் ஆசிரியர் பயிற்றுநர் தற்போது பணிபுரியும் பணியிடத்திற்கு பெற்ற மாறுதல் வகையைக் (நேரடி நியமனம் / பொது மாறுதல் / நிருவாக மாறுதல் / மனமொத்த மாறுதல் / பணி நிரவல் ) கூர்ந்தாய்வு செய்து பதிவு செய்ய வேண்டும்.

தற்போது பணிபுரியும் இடத்துக்கான மாறுதல் ஆணையை சரிபார்த்து பார்வையில் கண்ட அரசாணையில் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி திருத்தியிருப்பின் மாறுதல் விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

அனைத்து விண்ணப்பங்களும் முதன்மைக் கல்வி அலுவலரால், விடுபடாமல் கீழ்க்காணுமாறு பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண் டும்.


(அபதிவேடு A பதிவேட்டில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அனைத்து மாறுதல் கோரும் விண்ணப்பங்களும் மாறுதல் கோரும் பணியிடங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பொது மாறுதல் விண்ணப்பத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகக் கூர்ந்தாய்வு செய்து கணினியில் பதிவு செய்தல் வேண்டும். பதிவு செய்த விவரங்களைப் பின்னர் எக்காரணம் கொண்டும் திருத்தம் செய்தல் இயலாது.

மாறுதல் கோரும் ஆசிரியர் பமிற்றுநரது விண்ணப்பத்தை EMIS இணையதளத்தில் பதிவு செய்தவுடன் இரண்டு நகல் எடுத்து, ஒரு நகலை விண்ணப்பதாருக்கும் ஒரு நகலை அலுவலகத்திலும் பராமரிக்க வேண்டும்.

ஆசிரிய பயிற்றுநர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் 

 BRTE  Transfer Application In Pdf


BRTE Seniority List in Pdf