BT Staff Fixation And Surplus method
உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு!
GO Ms No. 12, Date 03.02.2022 -School Education Dept
ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி அன்று மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் (Staff fixation) செய்யப்படுகிறது. அவ்வாறு ஆசிரியர் பணியிடங்ள் நிர்ணயம் செய்யும் போது கீழ்கண்ட நடைமுறைகள் பின்பற்றபடுகிறது.
G.O. 217 for Staff Fixation And Deployment Date 20.06.2019
BT Staff Fixation DSE Proceeding Date:02.11.2021
BT- STAFF FIXATION TABLE 6-to-10 Student Strength Vs Teacher Post
BT Fixation Guidelines With Example
1). 1முதல் 5 ஆம் வகுப்பு வரை
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் ஒரு சில மாவட்டங்களில் 1 முதல் 10 வகுப்பு வரையிலும், 1 முதல் 12 வகுப்பு வரையிலும் சில அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறான பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள பிரிவுகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் தொடக்க/நடுநிலை பள்ளிகளில் பின்பற்றப்படுவதைப் போன்றே கீழ்கண்ட நடைமுறைகள் பின்பற்றபடுகிறது.
- 60 மாணவர்கள் வரையில் 2ஆசிரியர்களும்
- 61 முதல் 90 மாணவர்கள் வரை 3 ஆசிரியர்களும்
- 91 முதல் 120மாணவர்கள் வரை 4 ஆசிரியர்களும்
- 121 முதல் 200 மாணவர்கள் வரை 5 ஆசிரியர்களும்
இதே போன்று ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் 1 ஆசிரியர் கூடுகதலாக, அனுமதிக்கப்படவேண்டும்.
PG Staff Fixation And Surplus method
2). 6 முதல் 8 வகுப்பு வரை
- 6 முதல் 8 வகுப்பு வரையில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி, அடிப்படையில் குறைந்தபட்சம் 3 பணியிடங்கள் அனுமதிக்கப்படவேண்டும்.
- ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருப்பின் ஒரு பிரிவாகச், கணக்கிற்கொண்டு ஓர் ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யவும்
- மாணவர்களின் எண்ணிக்கை 50க்கு மிகைப்படும்போது அவ்வகுப்பினை இரண்டு பிரிவுகளாக பிரித்து கூட்டுதல் பிரிவு ஏற்படுத்தலாம்.
3). 9முதல் 10 வகுப்பு வரை
- 6-10 வகுப்பு வரையில் உள்ள பிரிவுகளுக்கு குறைந்தபட்ச மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 5 ஆசிரியர் பணியிடங்கள் (தலா ஒரு பாடத்திற்குஒரு பணியிடம் வீதம்) அனுமதிக்கப்படவேண்டும்.
- 9 மற்றும் 10ம் வகுப்பில் தலா 40 மாணவர்கள் இருப்பின் (1:40) வகுப்பிற்கு ஒரு பிரிவாக கணக்கிற்கொள்ள வேண்டும்.
- ஒரு குறிப்பிட்ட வகுப்பில் (9,10 வகுப்பு) மாணவர்களின் எண்ணிக்கை 60க்கு மிகைப்படும்போது அவ்வகுப்பினை இரண்டு பிரிவுகளாக பிரித்து கூட்டுதல் பிரிவு ஏற்படுத்தலாம்.
4.கூடுதல் தேவைப் பணியிடங்கள்: (Need Post )
மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் தேவை பணியிடங்கள் அனுமதிக்கும்போது பாடவாரியான சுழற்சியின் அடிப்படையிலும், அப்பள்ளிக்குத் தேவையின் அடிப்படையிலும் அறிவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ், சமூக அறிவியல் என்ற முறையில் நிர்ணயம் செய்திடவேண்டும்.
5)பாடவேளைகள் கணக்கிடுதல் (Calculation Of Periodes)
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும்போது ஓர் ஆசிரியருக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம் 28 பாடவேளைகள் ஒதுக்கீடு கணக்கில் கொள்ளவேண்டும்.
8)ஆங்கில வழிப்பிரிவுகள் பணியாளர் நிர்ணயம்
- பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும் போது தமிழ் வழிக் கல்வியில்: பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர் நிர்ணயம் செய்வது போன்றே, ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப தனியே ஆசிரியர் நிர்ணயம் செய்திட வேண்டும்.
- ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒவ்வாரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
- மாணவர்களின் எண்ணிக்கை 15க்கும் குறைவாக இருப்பின், அவ்வகுப்பில் உள்ள குறைந்தபட்ச மாணவர்களை அருகாமையில் செயல்படும் ஆங்கில வழி பிரிவுகள் உள்ள பள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
7) உபரி ஆசிரியர்களைக் கண்டறிதல் '
குறிப்பிட்ட பாடத்தில் உபரி எனக் கண்டறியப்பட்டால் பள்ளி வாரியாக குறிப்பிட்ட பாடத்தில் கடைசியாக அப்பள்ளியில் பணியில் சேர்ந்தவ்(Station junior) இளைய ஆசிரியர் அவரையே உபரி ஆசிரியர் பட்டியலில் பணி நிரவலுக்கு உட்படுத்த கணக்கிற்கொண்டு வருதல்வேண்டும்
8)பணிநிரவல் சார்பான நடைமுறை:
G.O. 217 Deployment Date 20.06.2019 அரசாணையில் பக்கம் 4ல் பத்தி 4 II ) i) ii) III) i) ii) பின்பற்றி செயல்படவேண்டும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..