PG Staff Fixation Method
01.08. அன்றைய நிலவரப்படி அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்பணியிடங்கள் நிர்ணயம் செய்தலுக்கான வழிமுறைகள்.
01.08.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்- Date 09.09.22 -Download
ஆண்டு தோறும் ஆகஸ்ட் முதல் நாள் நிலவரப்படி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 11,12 ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படும் அவ்வாறு நிர்ணயம் செய்யும் போது கீழ்கண்ட முறைகளை பின்பற்ற வேண்டும்.
DSE 01.08. PG Staff Fixation Proceeding in Pdf
G.O. for PG,BT,SGT Staff Fixation And Deployment Go No 217 Date 20.06.2019
பாட வேளை அடிப்படையில் ஆசிரியர்பணியிடங்கள் நிர்ணயம் - how many period in PG staff
- தமிழ் மற்றும் ஆங்கிலப்பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 4 பாட வேளைகள் என வாரத்திற்கு 24 பாடவேளைகள் வகுப்பு செல்லவேண்டும்
- இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 7 பாடவேளைகள் என வாரத்திற்கு 28 பாடவேளைகள் வகுப்பு செல்லவேண்டும்
- அவ்வாறு போதிய பாடவேளை இன்றி உள்ள முதுகலை ஆசிரியரை உரிய முறையில் கீழ்நிலை வகுப்புகளுக்கு (9,10ம் வகுப்பு) கற்பிக்க பாடவேளைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்
கூடுதல் தேவை பணியிடங்கள்.
- மொழிப்பாடத்தில் 24பாட வேளைக்கும், முதன்மைப் பாடத்தில் 28 பாட வேளைகளுக்கும் கூடுதலாக இருப்பின் இதற்கென ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம் செய்யலாம்
BT Staff Fixation And Surplus method
வகுப்பு அடிப்படையில் ஆசிரியர்பணியிடங்கள் நிர்ணயம் -How many Students in one class in 11th and 12th Std
- மேல்நிலைப்பிரிவுகளைப் பொறுத்தவரை 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 1:40 _ என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தினையே பின்பற்ற வேண்டும்.
- மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி/மாநகராட்சி: பகுதியாக இருப்பின் குறைந்த பட்சம் -30 மாணவர்கள் ஒரு வகுப்புக்கு இருக்க வேண்டும்
- ஊரக பகுதியாக இருப்பின் குறைந்த பட்ச மாணவர் எண்ணிக்கை 15 ஒரு வகுப்புக்கு/பாடப்பிரிவு இருக்க வேண்டும்
- குறைந்த பட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் பயிலும் மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1 முதல் 60 மாணவர்களுக்கு 1 ஒரு பிரிவும் அதற்கடுத்து ஒவ்வொரு 40 மாணவர்களுக்கு ஒரு கூடுதல் பிரிவு ஏற்படுத்திக்கொள்ளாம்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..