வரும் ஜனவரி  மூன்றாம் தேதி  2022 முதல் பள்ளிகள் 6 முதல் 12 வகுப்பு வரை சுழற்சி முறை இன்றி நடைபெறும்.- தமிழக அரசு அறிவிப்பு

03.01.2022 முதல் சுழற்சி முறை இன்றி 6-12 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் - அரசாணை வெளியீடு!!! GO No 882 Date:15.12.2021


பண்டிகைக்‌ காலங்களில்‌, கொரோனா நோய்த்‌ தொற்று பரவலைத்‌ கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்தும்‌, தற்போது அண்டை மாநிலங்களில்‌ பரவி வரும்‌ உருமாறிய கொரோணா  ஒமைக்ரான்‌ வைரஸ்‌ நோயைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, தடுப்பூசி செலுத்தும்‌ பணியினை விரைவுபடுத்தவும்‌, தலைமைச்‌ செயலகத்தில்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ 13.12.2021 அன்று ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

மத்திய அரசின்‌ உள்துறை அமைச்சகத்தின்‌ 30.11.2021 நாளிட்ட அறிவிக்கையின்படி கொரோனா நோய்த்‌ தடுப்பு கட்டுப்பாடுகள்‌31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIPR - P.R.No.1336 - Hon'ble CM Corono lockdown Press Release - Date 13.12.2021

தமிழ்நாட்டில்‌ நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின்‌ காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததனால்‌ மாணவர்களிடையே கற்றல்‌ திறன்‌ குறைந்துள்ளதையும்‌, மாணவர்களின்‌ எதிர்காலத்தை கருத்தில்‌ கொண்டும்‌, 03.01.2022 முதல்‌ அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள்‌ (6ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை மட்டும்‌),அனைத்து கல்லூரிகள்‌ மற்றும்‌ தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள்‌ சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்‌.