illam thedi kalvi module


கொரோனா நோய்த்தொற்றுக்‌ காரணத்தால்‌ பள்ளிக்‌ கல்வியில்‌ ஏற்பட்டுள்ள இடைவெளியைச்‌ சீர்‌ செய்யவும்‌ குழந்தைகளின்‌ மனநிலையை இலகுவாக்கவும்‌ .தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முயற்சியே, இல்லம்‌ தேடிக்‌ கல்வித்‌ திட்டம்‌.


illam thedi kalvi module Primary  1 To 5


illam thedi kalvi module Upper Primary  6 To 8


பள்ளியில்‌ பெறும்‌ கல்விக்கு உதவும்வகையில்‌ இல்லம்‌ தேடிக்‌ கல்வித்‌ திட்டத்தின்‌ பாடப்பொருள்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும்‌ இல்லம்‌ தேடிக்‌ கல்வித்‌ திட்டம்‌ இரண்டும்‌ ஒன்றுக்கொன்று உதவி, குழந்தைகளை இயல்பான கற்றல்‌ சூழலுக்கு இட்டுச்செல்லப்போகிறது.

முதல்‌ இரண்டு வாரங்களுக்குக்‌ கதை கூறுதல்‌/கேட்டல்‌, பாடுதல்‌, விளையாடுதல்‌, படம்‌ வரைதல்‌, கலை மற்றும்‌ கைவண்ணத்தில்‌ ஈடுபடுதல்‌ போன்ற மனமகிழ்ச்சிக்கான செயல்பாடுகளே வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான பாடப்பொருள்‌, தன்னார்வலர்களுக்கான கையேட்டில்‌ நாள்‌ வாரியாக வழங்கப்பட்டுள்ளன, அதில்‌ உள்ளபடியே நடத்தலாம்‌ அல்லது தன்னார்வலர்‌ தங்களுக்கு உகந்தவகையில்‌ திட்டமிட்டு முதலிரண்டு வாரங்களில்‌ இப்பாடப்பொருள்களை நடத்தலாம்‌.


அடுத்த இரு வாரங்களுக்கு தமிழ்‌, ஆங்கிலம்‌, கணக்கு, அறிவியல்‌ என்னும்‌ வரிசையில்‌ பாடப்பொருள்கள்‌ அளிக்கப்பட்டுள்ளன. இவற்றை கால அட்டவணையில்‌ உள்ளதற்கு ஏற்பவோ, தன்னார்வலர்‌ தமக்கு உகந்தவாறோ திட்டமிட்டு நடத்தலாம்‌. அடிப்படைத்‌ திறன்களான கேட்டல்‌, பேசுதல்‌, படித்தல்‌, எழுதுதல்‌ ஆகியவற்றுடன்‌ படைப்பாற்றலை இணைத்துத்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலப்‌ பாடப்பொருள்கள்‌ உருவாக்கப்பட்டுள்ளன.