மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை

அனைத்து பள்ளிகளிலும் 1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அனுமதி இல்லை 


DIPR-P.R NO.1468-Hon'ble CM Press Release-Date 31.12.2021-


அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசு

9-ஆம்‌ வகுப்பு முதல்‌ 12-ஆம்‌ வகுப்பு வரையிலான பள்ளிவகுப்புகள்‌, கல்லூரிகள்‌, தொழிற்பயிற்சி நிலையங்கள்‌நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்‌.

வழிபாட்டுத்‌ தலங்களைப்‌ பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்‌.

உணவகங்கள்‌, விடுதிகள்‌, அடுமணைகள்‌, தங்கும்‌ விடுதிகள்‌ மற்றும்‌ உறைவிடங்களில்‌ 50% வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்‌

பொது போக்குவரத்து பேருந்துகளில்‌ உள்ள இருக்கைகளுக்கு மிகாமல்‌ பயணிகள்‌ பயணிக்க அனுமதிக்கப்படும்‌

மெட்ரோ இரயிலில்‌ 50% இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌.

திரையரங்கங்கள்‌ உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும்‌ அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில்‌ அதிகபட்சம்‌ 50% பார்வையாளர்களுடன்‌ மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

அழகு நிலையங்கள்‌, சலூன்கள்‌ ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

திருமணம்‌ மற்றும்‌ திருமணம்‌ சார்ந்த நிகழ்வுகள்‌ அதிகபட்சம்‌ 100 நபர்களுடன்‌ மட்டும்‌ நடத்த அணுமதிக்கப்படும்‌.

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில்‌ 50 நபர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்படும்‌.

உடற்பயிற்சி கூடங்கள்‌ மற்றும்‌ யோகா பயிற்சி நிலையங்கள்‌ ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

துணிக்கடைகள்‌ மற்றும்‌ நகைக்கடைகளில்‌ ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல்‌ செயல்படுவதை கடை உரிமையாளர்கள்‌ உறுதி செய்ய வேண்டும்‌

கேளிக்கை விடுதிகளில்‌ உள்ள உடற்பயிற்சி கூடங்கள்‌,

விளையாட்டுக்கள்‌, உணவகங்கள்‌ ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.