Combined district level counseling for new district teachers
புதிய மாவட்ட ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் கவுன்சிலிங்
2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு – ஒருங்கிணைந்த வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றினைத்து ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் மாவட்டத்திற்குள் ஆசிரியர்களின் நலன் கருதி மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் தொடரபான தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
2021-22ம் கல்வியாண்டிற்கு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்பாக ஆணை வெளியிடப்பட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்காண் பொருளில் தெரிவித்துள்ள ஒருங்கிணைந்த மாவட்டங்களிலிருந்து பிரிந்து செயல்பட்டு வரும் புதிய மாவட்டங்களில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்கள் / பிறஆசிரியர்களின் நலன் கருதி அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கோ (அ )புதிய மாவட்டத்திற்கோ மாறுதலில் செல்ல ஏதுவாக இக்கலந்தாய்வில் மட்டும் (2021-22) சிறப்பு நிகழ்வாக கீழ்க்கண்ட அறிவுரைகளின்படி கலந்தாய்வு நடைபெறும் என் தெரிவிக்கப்படுகிறது.
CoSE Proceeding For Combined district level counseling
1) புதிய மாவட்டங்களைசார்ந்த ஆசிரியர்களுக்கும், ஒருங்கிணைந்த மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்படும்
2.புதிய மாவட்டங்களை உள்ளடக்கி ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் அனைத்து காலிப்பணியிடங்களும் கலந்தாய்வில் வெளியிடப்படும்.
3) ஒவ்வொரு பதவிக்கும் மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வு அன்று முற்பகலில் புதிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு மட்டும் காலையில் தொடங்கி கலந்தாய்வு நடைபெற்று முடிவுற்ற பின்னர் பிற்பகலில் புதிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்டத்திற்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
4) மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும் கலந்தாய்வு தற்போதுஉள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்நடைபெறும் எனவும் தெரிவிக்கலாகிறது.
5) ஒருங்கிணைந்த மாவட்டங்கள் மற்றும் அவற்றிலிருந்து பிரிந்த புதிய மாவட்டங்களில் பணிபுரிந்து மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அந்தந்த புதிய வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் தெரிவு செய்யப்படும் மையத்திலேயே நடைபெறும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..