NTSE Stage 1 Toppers list Districtwise -2021

2021-2022 ஆம்‌கல்வி ஆண்டு - அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ முழு ஆளுமைத்திறனை வளர்த்தல்‌ -நிதி விடுவித்தல்‌ மற்றும்‌ வழிக்காட்டுதல்‌


Proceedings - School Level Talent Search Exam -NTSE Stage- Toppers

School Level Talent Search Exam -NTSE Stage- Toppers List District Wise PDF


NTSE-தேசிய திறனறித்‌ தேர்வில்‌ கலந்து கொண்டு தகுதிபெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தவும்‌, போட்டித்‌ தேர்வில்‌ மாணவர்கள்‌ பங்கு பெறுதலை அதிகரிக்கவும்‌ திட்டமிடப்பட்டுள்ளது.


இதனடிப்படையில்‌,   2020-21 ஆம்‌ ஆண்டில்‌ NTSE கலந்து கொண்டு மாவட்ட அளவில்‌ முதல்‌ மூன்று இடத்தை பெற்ற மாணவ/மாணவிகளின்‌ விவரம்‌ (மாவட்ட வாரியாகவும்‌ ஒரே மதிப்பெண்‌ பெற்று ஒரே இடத்தை பெறும்‌ மாணவர்களின்‌ விவரம்‌ சேர்த்து பெறப்பட்டுள்ளது) மற்றும்‌ மாற்றுத்‌ திறனாளிகள்‌ பிரிவில்‌ வகைவாரியாக மாநில அளவில்‌ முதல்‌ மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள்‌ என மொத்தம்‌ 255 மாணவர்களின்‌ விவரம்‌ அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது:

மேற்கண்டவாறு தெரிவு செய்யப்பட்டுள்ள 255 மாணவர்களை (மாவட்ட அளவில்‌ - 248, மாநில அளவில்‌ - 7 ஆக மொத்தம்‌ 255 மாணவர்கள்‌) ஊக்கப்படுத்தவும்‌, மேலும்‌ கற்றலின்‌ மீது ஆர்வத்தைத்‌ தூண்டும்‌ விதமாகவும்‌, அவர்களுக்கு பரிசளிக்கும்‌ வகையில்‌ மாணவர்‌ ஒருவருக்கு ரூ.3000/- வீதம்‌ மொத்தம்‌ ரூ.7,65,000/- நிதி இணைப்பில்‌ உள்ளவாறு மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது.

3000/- மதிப்புள்ள பொருட்களை பரிசளிக்க அறிவுறுத்தப்படுகிறது. எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ மாணவர்களுக்கு பணமாக வழங்கக்கூடாது.