2022-23ஆம்‌ கல்வி ஆண்டு - தொடக்கக்‌ /நடுநிலை அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை பணிகள்‌ தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ அறிவுரைகள்‌..


தமிழ்நாட்டில்‌ பள்ளிகளில்‌ சேராத மாணவர்கள்‌ எவரும்‌ இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்‌. 86வது சட்டத்‌ திருத்தத்தின்படி தொடக்கக்‌ கல்வி, அடிப்படை உரிமையாக்கப்பட்டு உள்ளது என்பது அனைவரும்‌ அறிந்ததே. மாணவர்களை கறசு பள்ளியை நோக்கி ஈர்க்கும்‌ வண்ணம்‌ செயல்பட வேண்டியது பெற்றோற்‌, ஆசிரியர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி நிர்வாகம்‌ என்ற முக்கூட்டின்‌ தலையாய கடமையாகும்‌. எனவே, 5 வயது பூர்த்தியடைந்த அனைத்துகுழந்தைக ளையும்‌ சரசுப்‌ பள்ளியில்‌ சேர்ப்பதற்கு கீழ்க்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம்‌. மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ தலைமையில்‌ கூட்டம்‌ ஒவ்வாரு மாவட்டத்திலும்‌ மாவட்ட ஆட்சியற்‌ தலைமையில்‌ கூட்டங்கள்‌ நடத்தி, அதில்‌ உள்ளூர்‌ முக்கிய பிரமுகர்கள்‌ மற்றும்‌ அனைத்துத்‌ துறை அலுவலர்களையும்‌ பங்கு பெறச்‌ செய்து அரசு பள்ளிகளில்‌ கட்டணமே பெறப்படாமல்‌ மாணவற்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது என்பதை எடுத்துரைத்தும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தியும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்கள்‌ சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

DEE -Students Admission 2022 Instruction  And Proceeding  Pdf -Download 


விழிப்புணர்வு மற்றும்‌ சேர்க்கை பேரணி நடத்துதல்‌

அரசுப்‌ பள்ளிகளில்‌ காற்றோட்டமான வகுப்பறைகள்‌, குடிநீர்‌ வசதி, கழிப்பிட வசதி, தமிழ்‌ வழிப்‌ பிரிவுகளுடன்‌ துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழி பிரிவுகள்‌ மற்றும்‌ நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள்‌ பணியில்‌ உள்ளனர்‌ என்பதனையும்‌ மாணவர்களுக்கு அரசு வழங்கும்‌ நலத்திட்டங்கள்‌ சாற்ந்தும்‌ மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களின்‌ அறிவிப்பின்‌ படி 1 முதல்‌ 5ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதையும்‌ எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்‌.

●விழிப்புணர்வு பேரணி மற்றும்‌ பிரச்சாரமானது பொது மக்கள்‌ அதிகமாக கூடும்‌ இடங்களில்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌.

●மக்கள்‌ கூட்டம்‌ அதிகம்‌ உள்ள இடங்கள்‌ மற்றும்‌ மக்கள்‌ குடியிருப்புகள்‌ அதிகம்‌ உள்ள இடங்கள்‌ இவற்றில்‌ கூடுதல்‌ கவனம்‌ செலுத்தப்பட வேண்டும்‌.

●அனைத்து ஆசிரியர்களையும்‌ கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

●பள்ளிகளில்‌ மாணவர்கள்‌ சேர்க்கையினை கோடை விடுமுறை இறுதியில்‌ பள்ளிகள்‌ திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே நடைவறச்‌ செய்யுமாறு பள்ளியில்‌ உள்ள அனைத்து ஆசிறியர்களுக்கும்‌ அறிவுறுத்த வேண்டும்‌.

●குறிப்பாக ஒற்றை இலக்கத்தில்‌ மாணவர்கள்‌ எண்ணிக்கை உள்ள பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ அற்ப்பணிப்பு உணர்வுடன்‌ பணியாற்றி மாணவர்‌ எண்ணிக்கை இரட்டை இலக்கத்திற்கு கட்டாயமாக உயர்த்த அறிவுறுத்த வேண்டும்‌.

பேரணியில்‌ இடம்வறத்தக்க வாசகங்கள்‌ சில

1. பள்ளி வயதுக்‌ குழந்தைகள்‌ அனைவரையும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்த்திடுவோம்‌.

2. பள்ளி வயதுக்‌ குழந்தைகளை வேலைக்கு அனுப்பாதீர்‌, பள்ளிக்கு அனுப்புங்கள்‌

3.கல்வி என்பது குழந்தையின்‌ அடிப்படை உரிமை.

4.சமதர்ம சமுதாயம்‌ நிலைபெற ஒரே வழி கல்வி.

5.குழந்தைகளே நாட்டின்‌ கருவூலம்‌.

6.குழந்தைகளை கரசு பள்ளிக்கு அனுப்புவோம்‌, நூறு விழுக்காடு சேர்க்கை இலக்கை அடைவோம்‌.

7. கற்றோர்க்கு சென்ற இடமல்லாம்‌ சிறப்பு.

8. நாட்டின்‌ வளர்ச்சிக்கு கல்வியே உயிர்நாடி.

9. ஐந்து வயது நிரம்பிய பின்‌ வீட்டில்‌ இருப்பது நியாயமா?

10. ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி இயக்கத்தின்‌ மூலம்‌ அனைவரையும்‌ படிக்க வைப்போம்‌

11. பெண்களை படிக்க வைப்போம்‌ சமுதாய வளர்ச்சிக்கு வழி

வகுப்போம்‌

12. புத்தகச்‌ சுமையின்றி முப்பருவ முறையில்‌ படித்திடுவோம்‌

13. பள்ளிக்குச்‌ செல்வோம்‌ பல்கலை அறிவோம்‌

14. அனைவரும்‌ படிப்போம்‌ அகிலத்தை வெல்வோம்‌.

15. கல்வி மட்டுமே சமத்துவம்‌ மலரச்‌ செய்யும்‌ மிகப்பெரிய ஆயுதம்‌.

அரசுப்‌ பள்ளியில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு கிடைக்கும்‌ முன்னுரிமைகள்‌

●அரசுப்‌ பள்ளியில்‌ 1 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை தமிழ்‌ வழியில்‌ கல்வி பயிலும்‌ மாணவர்களுக்கு அரசுப்‌ பணியில்‌ 2௦ சதவீதம்‌ முன்னுரிமை

●6 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை அரசுப்‌ பள்ளியில்‌ பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீதம்‌ முன்னுரிமை

●பெண்‌ கல்வி இடைநிற்றலைத்‌ தவிர்க்க அரசுப்‌ பள்ளியில்‌ பயிலும்‌ மாணவிகளுக்கு உயர்‌ கல்வி பயில மாதந்தோறும்‌ ரூ.1000/-

பள்ளி தலைமை ஆசிரியர்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ கடமைகள்‌


●அங்கன்வாடியில்‌ பயிலும்‌ குழந்தைகளில்‌ 5 வயதுடைய குழந்தைகளைக்‌ கண்டறிந்து அவற்களை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

●பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில்‌ உள்ள அனைத்து 5 வயதுடைய குழந்தைகளைக்‌ கண்டறிந்து அவர்களை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க வீடுதோறும்‌ நேரடியாக சென்று  சேர்க்கையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

●பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில்‌ 5 வயதுடைய குழந்தைகளைக்‌ கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

●இடைநின்ற மாணவர்களைக்‌ கண்டறிந்து அவர்களை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

●பள்ளி அமைந்திருக்கும்‌ குடியிருப்பு பகுதிகளில்‌ உள்ள 5 மாணவர்களை 100% அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்ப்பது தலைமை ஆசிரியர்‌ மற்றும்‌ உதவி ஆசிரியரின்‌ தலையாய கடமையாகும்‌

● பள்ளியின்‌ சாதனைகள்‌, வளர்ச்சி, பல்வேறு வகையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள்‌, கல்விமுறை, பாதுகாப்பு குறித்து பெற்றோர்‌ ஆசிரியர்‌ கூட்டம்‌ மற்றும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்டத்தின்‌ வாயிலாக பெற்றோர்களிடம்‌ எடுத்து கூறலாம்‌.

●பள்ளிகளில்‌ உள்ள திறன்‌ வகுப்பறைகளின்‌ செயல்பாடுகள்‌ பற்றியும்‌ விரைவுத்‌ துலங்கல்‌ குறியீடு  வழியாக பாடக்‌ கருத்துகள்‌ எளிமையாக்கப்பட்டு கற்றல்‌ செயல்பாடு நடைவறுகின்றது என்பதைப்‌ பற்றியும்‌ பெற்றோற்களுக்கு விரிவாக எடுத்துக்‌ கூற வேண்டும்‌.

●தனியார்‌ பள்ளிகளுக்கு நிகரான இணைய வழி  பாட கற்பித்தல்‌ பற்றியும்‌ புலனக்குழு ( whats app வழி ஆசிரியர்‌-மாணவர்‌ பாட பரிமாற்றங்கள்‌ பற்றியும்‌ பெற்றோர்களுக்கு விரிவாகவும்‌ தெளிவாகவும்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌.

●பள்ளியில்‌ சேரும்‌ குழந்தைகளுக்கு ஊக்கப்‌ பரிசு வழங்குவதன்‌ மூலம்‌ மாணவர்‌ சேர்க்கையை மேலும்‌ அதிகரிக்கலாம்‌.


மேற்கண்ட வழிமுறைகளைப்‌ பின்பற்றி 2022-23ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கையை அதிகரித்திட அனைத்து அரசுப்‌ பள்ளிகளின்‌ ஆசிரியர்கள்‌ / தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்