Go No 53  Date: 08.06.2022 weightage Govt Servants

விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ், தமிழக அரசு அரசாணை வெளியீடு.

Fundamental Rules- Rule 56(3)(d) - Revision of weightage with reference to age for all the Government servants other than the Government servants in the Tamil Nadu Basic Service- Amendment - Issued.

G.O.(Ms) No. 53 Dated: 08.06.2022 Pdf Download 





அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,  விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு,  புதிய வெயிட்டேஜிக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-ஆக இருந்த போது அரசு ஊழியர் ஒருவர் 54-வயது மற்றும் அதற்கு கீழ் வயதிற்குள்ளாக விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக ஐந்து ஆண்டு பணியாற்றியதாக வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. 

தற்போது ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54-க்கு பதிலாக 55-வயது மற்றும் அதற்கு கீழ் பணியாற்றி விருப்ப ஓய்வு கொடுத்தால், அதே போல ஓய்வு பெறும் வயது ஐம்பத்தி ஆறு என்றால் அவருக்கு நான்காண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60-ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும். 

ஐம்பத்தி ஏழு வயதாகி  ஓய்வு பெற்றால் மூன்று ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்படும். 

ஐம்பத்தி ஒன்பது வயதில் விருப்பு ஓய்வு கொடுத்தால் அவர் 60-வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.

விருப்ப ஓய்வு பெற்ற மாதத்திலிருந்து அவர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டு ஓய்வு ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதால், இதுபோன்ற புதிய வெயிட்டேஜிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2004-க்கு பிறகு சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.