How To Apply For Re Total For SSLC  2022


பத்தாம் வகுப்பு தேர்வர்கள் - மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

10ஆம் வகுப்பு  பொது தேர்வு முடிவுகள் 20.06.2022 வெளியிடப்பட்டது .அந்த முடிவுகளில் ஏதேனும் மதிப்பெண்களில் ஐயம் இருந்தால் மறுகூட்டல் விண்ணப்பிக்கலாம் அதற்கான வழிமுறைகளை தமிழக அரசு தேர்வு இயக்கம் வெளியிட்டுள்ளது 

மே 2022, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் மறுகூட்டலுக்கு (Retotaling) விண்ணப்பிக்கலாம்.


மே 2022 பத்தாம் வகுப்பு தேர்வெழுதி விடைத்தாட்களின் மதிப் பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 22.06.2022 (புதன் கிழமை) காலை 10.00 மணி முதல் 29.06.2022 (புதன் கிழமை) மாலை 5.00 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் :தங்கள்  பயின்ற பள்ளி 

தனித்தேர்வர்கள் :தேர்வெழுதிய தேர்வு மையம்

நாள்:   22.06.2022 காலை 10.00 மணி முதல் 29.06.2022 மாலை 5.00 மணி 

மறுகூட்டல் கட்டணம்:

ஒவ்வொரு பாடத்திற்கும் - ரூ.205/-


மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை: 

மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்