08 12 22 கனமழை காரணமாக பள்ளி ,கல்லூரி  விடுமுறை 


வங்கக்‌ கடலில்‌ உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம்‌ காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்‌ பல்வேறு  மாவட்டத்தில்‌  08.12.22 அன்று கல்லூரி,பள்ளிகளுக்கு மட்டும்‌ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விபரம் 

1.திருவாரூர் -பள்ளி மட்டும் 

2.தஞ்சாவூர் - பள்ளி மற்றும் கல்லூரி 


தென்கிழக்கு வங்கக்கடலில்‌ நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி, மேற்கு-வடமேற்கு திசையில்‌ நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

மேலும்‌  இது மேற்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து 08, 09-ம்‌ தேதிகளில்‌ வடதமிழகம்‌-புதுவை மற்றும்‌ அதனை ஓட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஓட்டி நிலவக்கூடும்‌.

மாண்டஸ்‌ புயல்‌ டிசம்பர்‌ 9-ம்‌ தேதி மாலை முதல்‌ 10-ம்‌ தேதி அதிகாலை கரையைக்‌ கடக்கும்‌.