23.5.2021 அன்று மத்திய அரசின் பள்ளி கல்வித் துறை CBSE முறையில் செயல்படும் பள்ளிகளில் மற்றும் மாநில பள்ளிகளில்  பயிலும் மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு குறித்து அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது ..

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து மத்திய அரசுக்கு இன்று பதில்  அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எப்போது நடத்துவது, ஆன்லைனில் நடத்துவதா, பள்ளியில் வைத்து முக்கியமான பாடங்களுக்கு மட்டும்  நடத்துவதா என்பது குறித்து ஆலோசிக்க பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆய்வு கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு பிறகு, அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: பிளஸ் 2 பொதுத் தேர்வு விவகாரம் தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு  கொண்டு சென்றுள்ளோம். குறித்து 25ம் தேதிக்குள் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  தமிழக  அரசின் நிலைப்பாடு குறித்து இன்று மாலைக்குள் மத்திய அரசுக்கு பதில் அளிக்கப்படும். மேலும், தமிழகத்தில் செயல்படும்  தனியார் பள்ளிக்கு கட்டணம் அரசு நிர்ணயம் செய்துள்ளது. அந்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூல் செய்யும் பள்ளிகளுக்கு அபராதம்  விதிக்கப்படும். அந்த பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும். தற்போது கொரோனாவால் பாதித்த, இறந்த  ஆசிரியர்களின் விவரங்கள்  திரட்டப்படும்.